Wednesday, June 25, 2008

காந்திக்கு 'கால் லெட்டர்' அனுப்பிய ஸ்டேட் பாங்க்!

காந்திக்கு 'கால் லெட்டர்' அனுப்பிய ஸ்டேட் பாங்க்!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

அகமதபாத்: தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு கூறி தேசப் பிதா மகாத்மா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

இந்த வேடிக்கை, விநோத கடிதத்தை சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் பெற்றுள்ளனர். மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கான துறை தான் இதை அனுப்பி வைத்துள்ளது.

கடிதத்தில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என மகாத்மாவின் ஒரிஜினல் பெயர் இடம் பெற்றுள்ளது. முகவரியாக குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரத்தின் முகவரி இடம் பெற்றுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஏஜி டீச்சர்ஸ் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிளர்க்குகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டேட் வங்கி சார்பில் நடத்தப்படும் வங்கித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கான பயிற்சி வகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது சில விஷமிகள் செய்த செயலாகத் தெரிகிறது. வேண்டுமென்றே காந்தியின் பெயரை யாரோ இந்த பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து என்றோ கிருஷ்ணர் என்று பெயரிட்டு அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால், அந்த முகவரிக்கு கடிதம் செல்லும். காரணம், கம்ப்யூட்டருக்கு வேறு எதுவும் தெரியாது. அதேபோலத்தான் காந்தி பெயருக்கு இப்படி ஒரு கடிதம் போயிருக்கக் கூடும் என்றனர்.

இப்படியும் ஒரு விஷம விளையாட்டா!!
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails