கொழும்பு, ஜுன். 16-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணு வத்துக்கும் கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்தம் வாபஸ் ஆனது. இதை யடுத்து இரு தரப்பினருக்கும் நாளுக்கு நாள் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத் தும் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வரு கிறது.
ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் அவ்வப் போது பல்வேறு நகரங் களில் புகுந்து மனித வெடி குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கொழும்பு நகரில் கடந்த மாதம் பஸ், ரெயில்கள் குண்டு வெடித்தன.
இந்த நிலையில் இன்று வவுனியா நகரில் விடுதலைப் புலிகள் போலீஸ் தலைமை அலுவலகம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். அங்குள்ள உயர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீசார் இன்று காலை புறப்பட்டு சென்ற போது பயங்கரமாக குண்டு வெடித் தது. மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். சக்தி வாய்ந்த அந்த குண்டு வெடித்தது.
இதில் அந்த அலுவலகத் தில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த போலீசார் 12 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலி யானவர்களில் 3 பேர் பெண் போலீசார். 23க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பள்ளிக்கூட சிறுமியும் இதில் காயம் அடைந்தாள்.
விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடிருப்பில் உள்ள குடியிருப்புகள் மீது இலங்கை விமானங்கள் நேற்று சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத் தின. இதில் 4 அப்பாவி பொது மக்கள் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந் தனர். அங்குள்ள பள்ளிக் கூடங்களும் ராணுவத்தின் குண்டு வீச்சில் இடிந்து தரைமட்டமானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகை யில் இன்றைய தாக்குதல் அமைந்தது.
விடுதலைப்புலிகளின் முகாம் குண்டு வீசி அழிப்பு
இலங்கையின் முல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடி யிருப்பில் உள்ள விடு தலைப்புலிகளின் முகாம் மீது இலங்கை ராணுவ விமானங்கள் சரமாரியாக குண்டு வீசின. இதில் விடு தலைப்புலிகளின் முகாம் அழிக்கப்பட்டதாகவும், அந்த முகாம் தீ பிடித்து எரிந்ததாகவும் தாக்குதல் நடத்திய ஒரு விமானி தெரி வித்தார்.
No comments:
Post a Comment