இந்தியாவின் மக்கள்தொகை 106 கோடி. நம் நாட்டின் காலடியில் புள்ளிபோல ஒட்டிக்கொண்டிருக்கும் மாலத்தீவுகளின் மக்கள்தொகை வெறும் 3 லட்சம்.
இந்தப் `பொடியன்', தெற்காசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை மண்ணைக் கவ்வ வைத்து சாம்பியனாகிவிட்டது .
ஐரோப்பிய கோப்பை (ïரோ கப்) கால்பந்து போட்டிகள் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய கால்பந்து அணிக்கு இப்படியொரு பரிதாபம்.
முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற பரபரப்பில் இந்தத் தோல்வி அமுங்கிப் போய்விட்டது. ஆனால் இது கவலைக்குரிய விஷயம்.
ஏற்கனவே உலக அளவில் கால்பந்தில் 153 என்ற `உயர்ந்த' இடத்தில் இருக்கிறோம். நம்மை விட 6 இடங்கள் மட்டுமே பின்தங்கியிருக்கும் மாலத்தீவு இம்முறை அதிர்ச்சித் தோல்வி அளித்து விட்டது.
உலகக்கோப்பை போட்டிகளில் நாம் நெருங்கவே முடிவதில்லை. 1950-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியìல் இந்தியாவுக்கு நேரடி வாய்ப்பு அளìக்கப்பட்டது. ஆனால் கால்பந்து ஷூக்கள் அணிய இநëதிய வீரர்கள் மறுத்துவிட்டதால் அந்த வாய்ப்பும் அதோகதியாகிவிட்டது. களமிறங்க அனுமதிக்கப்படவில்லை.
மற்றபடி 1956-ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில் 4-வது இடம் பெற்றதும், 1962-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி சாம்பியன் ஆனதும், தொடர்ந்த அடுத்த இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அரையிறுதியை எட்டியதும்தான் இந்தியாவின் ஆகக்கூடிய சாதனைகள். (1948-ம் ஆண்டு இந்தியா தனது முதல் சர்வதேசப் போட்டியில், இன்று உலகின் முன்னணì அணிகளுள் ஒன்றாகத் திகழும் பிரான்சுடன் 2- 2 என்ற கோல்கணக்கில் `டிரா' செய்தது எத்தனை பேருக்குத் தெரியும்?)
தற்போது ஆசிய அளவிலேயே 26-வது இடத்தில் இருக்கும் இந்தியா, ஏதோ தெற்காசிய அளவிலாவது தனது கவுரவத்தைக் காப்பாற்றி வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற 6 தெற்காசிய கோப்பை போட்டிகளில் நான்கில் சாம்பியனான இந்தியாவுக்கு வேட்டு வைத்துவிட்டது மாலத்தீவுகள்.
இந்திய கால்பந்துக்கு இனி விமோசனம் உண்டா?
http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=6/21/2008&secid=11
No comments:
Post a Comment