யூரோ 2008 : இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி முன்னேற்றம் |
துருக்கியை 3- 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மனி அணி, யூரோ 2008 கால்பந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஜெர்மன் அணியில் வெற்றிக்கு வித்திட்டார், பிலிப் லாம். இந்த ஆட்டத்தில் 22-வது நிமிடத்தில் துருக்கி வீரர் உகுர் போரல் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஜெர்மனியின் பாஸ்டியன் ஷ்வெய்ன்ச்டெய்ஜர் அபாரமான கோலை அடித்தார். இதனால், இரு அணிகளும் 1- 1 என்ற சம நிலையில் இருந்தது. இடைவேளை வரை துருக்கியின் ஆதிக்கம் இருந்தது. 6 முறை கோலை நோக்கி துருக்கி வீரர்கள் ஷாட்களை அடிக்க ஜெர்மனி அந்த ஒரு கோல் தவிர மற்றபடி துருக்கியை பெரிதாக அச்சுறுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு, 79வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் லாம் தூக்கி அடித்த ஷாட்டை பிடிக்க, துருக்கி கோல் கீப்பர் ரஸ்டு முயன்றார். ஆனால், ஜெர்மனி வீரர் க்ளொஸ் அதற்குள் பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதையடுத்து, துருக்கி வீரர் சாப்ரி சரியோக்லு தாழ்வாக ஒரு ஷாட்டை அடித்தார். அதனை கோலாக மாற்றினார்,செமி. இதனால், இரு அணிகளும் மீண்டும் சமநிலை பெற்றது. ஆனால், இறுதி கட்டத்தில் தனது அதிவேக ஆட்டத்தால் லாம் வெற்றிக்கான கோலை அடித்து, ஜெர்மனி அணி இறுதிக்கு முன்னேற வழிவகுத்தார். |
(மூலம் - வெப்துனியா) |
Thursday, June 26, 2008
யூரோ 2008 : இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி முன்னேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment