ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். பஸ், திருச்சிக்கு சென்றபோது கண்டக்டர் "அரை மணி நேரம் பஸ் இங்கு நிற்கும்... சாப்பிடுபவர்கள்... சாப்பிட்டு வரலாம்'' என்றார். உடனே எல்லாரும் சாப்பிடச் சென்றோம். பக்கத்தில் இருந்த ஓட்டலில் நான் சாப்பிட்டு விட்டு 50 ரூபாய் கொடுத்தேன்.
கல்லாவில் இருந்தவர் நான் நூறு ரூபாய் கொடுத்த ஞாபகத்தில் எனக்கு மீதி ரூபாய் கொடுத்தார். அடுத் தவர் காசு நமக்கு எதற்கு? என்று நினைத்த நான், ``தம்பி... நான் ஐம்பது ரூபாய்தான் கொடுத்தேன், நீங் கள் நூறு ரூபாய்க்கு மீதி கொடுத்து விட்டீர்கள்'' என்று சொல்லியபடி... ஐம்பது ரூபாயை திருப்பிக் கொடுத்தேன்.
திரும்பி நடந்தபோது... யாரோ பளாரென்று அறையும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். அங்கே ஓட்டல் முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தவரை அடித்து உதைத்து... ``ஏன்டா... இப்படித்தான் என்காசை கணக் குத் தெரியாமல் அள்ளிக் கொடுத்து ஓட்டலை அழித்து வருகிறாயா?... நீ வேலைக்கு வேண்டாம். போடா வெளியே'' என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்.
இதைக் கண்ட எனக்கு இதயமே நொறுங்கியதைப் போன்று உணர்ந்தேன். முதலாளி பக் கத்தில் இருப்பதை பார்க்காமல், என்னுடைய நேர்மையை வெளிக்காட்டியதால்... அறியாமல் தவறு செய்த ஒருவரின் வேலையையே பறித்து விட்டோமே... என்று நொந்தபடி பயணத்தை தொடர்ந்தேன். நமது நேர்மையே மற்றவர்களுக்கு சில நேரங்களில் சோதனையாக அமைந்து விடுகிறதே!
No comments:
Post a Comment