பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கிய 700 பேரை மீட்பதில் சிக்கல் | |
மணிலா: பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கிய கப்பலில் சிக்கிய 700 பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடும் புயல் தாக்கியதில், 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்தனர். இந்நிலையில், மணிலாவில் இருந்து சிபுயான் தீவுக்கு பிரின்சஸ் ஆப் ஸ்டார்ஸ் என்ற கப்பல் 700 பயணிகளுடன் சென்றது. இந்தக் கப்பல் புயலில் சிக்கியதால், 50 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்து தண்ணீரில் குதித்து மிதந்தனர். அதற்குள், கப்பல் கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது. இதனால், அதில் பயணித்த 700 பயணிகள் உயிருக்கு போராடினர். கப்பலின் அடிப்பகுதியில் போராடும் பயணிகளை மீட்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், கடல் சீற்றம் அதிகமானதைத் தொடர்ந்து, மீட்பு குழுவினரின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், 700 பேரும் உயிரிழந்திருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, அமெரிக்க கப்பலும், ஹெலிகாப்டரும், மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
Wednesday, June 25, 2008
பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கிய 700 பேரை மீட்பதில் சிக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment