பாகிஸ்தானில்
பழங்குடியின தலைவர்கள் 28 பேர் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத், ஜுன். 26-
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் அரசுக்கு ஆதரவான அமைதி குழு உறுப்பினர்களான பழங்குடியின தலைவர்கள் 30 பேரை பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் 2 நாட்களுக்கு முன்பு கடத்திச்சென்றனர்.
கடத்தப்பட்டவர்களில் 28 பேரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட உடல்கள் கரிவார்ம் கிராமத்தில் உள்ள ஒரு மார்க்கெட்டில் கிடந்தன. இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அதோடு நேற்று நடப்பதாக இருந்த பழங்குடியின தலைவர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=421485&disdate=6/26/2008



No comments:
Post a Comment