மைக்ரோசாப்ட்: விலகுகிறார் பில்கேட்ஸ் |
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கேட்ஸ், இனி தனது பெரும்பாலான நேரத்தை பில் கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளையின் சமூக நலப் பணிகளில் செலவிடவுள்ளார்.
ஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Chairman பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார். இதுவரை கேட்ஸ் வகித்து வந்த தலைமைப் பொறுப்பில் ஸ்டீவ் பால்மர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பால்மர் மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்தார்.
1975ல் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கினார் கேட்ஸ். 52 வயதான கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து உலகின் மிகப் பெரிய அறக்கட்டளையையும் நிறுவி அதன் மூலம் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மூன்றாம் உலக நாடுகளில் இந்த அறக்கட்டளை எய்ட்ஸ் கட்டுப்பாடு, நோய்கள் ஒழிப்பு, கல்வியறிவூட்டல் போன்ற பெரும் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த அறக்கட்டளையில் உலகின் மாபெரும் பணக்காரரான வாரன் பவெட்டும் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளார்.
No comments:
Post a Comment