""சென்ற மாதம் என் பிறந்த நாள் வந்தது. டாக்டர் எனக்குக் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதாகச் சொன்னதால், பிறந்த நாளிலிருந்து பழங்களும் காய்கறிகளும் மட்டுமே சாப்பிட முடிவெடுத்தேன். ஆனால் 1) இவற்றை எப்படிச் சாப்பாடுடன் கலப்பது என்று தெரியவில்லை; 2) பசுமையான பழங்களை வாங்கப்போனால் விலை அதிகமாக இருக்கிறது. இவற்றில் எதனை வாங்கலாம் என்று தெரியவில்லை. இதற்கு செலவழிக்கும் பணம் உடல் நலத்திற்கான முதலீடு என்பதால், இந்த முதலீட்டை வீணாக்கமல் எப்படி பாதுகாப்பது என்று தெரியவில்லை; 3) விலை அதிகமாக இருப்பதால் எதை விடுத்து, அந்த இடத்தில் எதனை வாங்குவது என்று தெரியவில்லை'' என்று அண்மையில் சந்தித்த நண்பர் ஒருவர் என்னிடம் புலம்பினார். அதோடு விடாமல் உங்கள் இன்டர்நெட்டில் இதற்கு தீர்வு இருக்கிறதா, பார்த்துச் சொல்லுங்களேன் என்றும் அன்புக் கட்டளை இட்டுச் சென்று விட்டார். ஆனால் தொடர்ந்து போனில் ""என்ன பார்த்தீர்களா?'' என்று அவ்வப்போது விசாரிக்கவும் செய்தார்.
இவரின் கேள்விக் கணைகளை முன்னிறுத்தி இணையத்தில் தேடியதில் ஓர் அருமையான தளம் இவருக்கெனவே வடிவமைத்தது போலக் கிடைத்தது. அதன் முகவரி http://www.fruitsandveggiesmorematters.org/
இந்த தளம் பழங்களையும் காய்கறிகளையும் எப்படி பயன்படுத்தினால் சுவையாக இருக்கும் எனப் பல வழிகளைத் தருகிறது. அத்துடன் அவற்றை எப்படி பத்திரமாக வைத்துப் பாதுகாத்துப் பின் எடுத்து பயன்படுத்துவது என்று காட்டுகிறது. இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்தல், இதயத்தை நலத்துடன் இருக்க வைத்தல், கேன்சர் போன்ற நோய்களைத் தடுத்தல் போன்ற பல பயன்களுக்குக் காய்கறிகளும் பழங்களும் எப்படி உதவுகின்றன என்று காட்டுகிறது.
ஏன் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும்? இந்த சத்து மற்றவற்றில் இல்லையா? என்ற கேள்விக்கு இந்த தளத்தில் நல்ல பல காரணங்களைப் பார்க்கலாம். இவற்றைப் படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் பழங்களையும் காய்கறிகளையும் தங்கள் உணவில் அதிகம் சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த தளத்தில் ஆறு பிரிவுகள் உள்ளன. 1) பழங்களும் காய்கறிகளும் எதற்காக? 2)திட்டமிட்டு இவற்றை வாங்குதல் 3)சமைத்தல், 4)குழந்தைகளை எப்படி ஈடுபடுத்துவது? 5) சமுதாயம், மற்றும் 6) நல வாழ்க்கைக்கான மூலக் கூறுகள். இவை ஒவ்வொன்றிலும் பல துணைப் பிரிவுகள் உள்ளன.
சமைத்தல் என்னும் பிரிவில் பல சுவையான பண்டங்கள் தயாரிக்கும் வழிமுறை குறித்து குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
இந்த தளத்தை ஒரு முறை பார்த்தவர்கள் பின் தொடர்ந்து பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்
source:dinamalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment