Sunday, November 1, 2009

“அல்கொய்தாவை அழிக்காமல் பாகிஸ்தான் தப்ப முடியாது” அமெரிக்கா அறிவிப்பு


 
 இஸ்லாமாபாத்,  அக்.31-
  
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் கடந்த புதன்கிழமை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இச்சம்ப வம் நடந்த இடத்தை பார்வையிடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் வந்துள்ளார்.
 
பெஷாவர் சென்ற அவர் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாசவேலைக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகள் எங்கு இருக் கிறார்கள் என எங்களுக்கு தெரியாது. அதுபற்றிய தகவல்கள் எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் அரசுக்கு தெரியும்.
 
அவர்கள் (அல்கொய்தா தீவிரவாதிகள்) பாகிஸ் தானில்தான் பதுங்கி இருக் கிறார்கள். அவர்கள் பாகிஸ் தானுக்கு மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கும் அச் சுறுத்தலாக இருக்கின்றனர்.
 
எங்களுக்கும் (அமெரிக்கா வுக்கும்) அச்சுறுத்தலாக உள்ளனர். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்த லாக இருக்கின்றனர். எனவே பாகிஸ்தானை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தீவிரவாதம் ஒழிய வேண்டுமென்றால் நீங்கள் அல்கொய்தாவிடம் இருந்து விலக வேண்டும்.
 
ஆகவே, அல்கொய்தா தலைவர்களை கைது செய்ய வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் தப்ப வேண்டுமென்றால் அல்கொய்தா தீவிரவாதி களை ஒழிக்க வேண்டும். அதுதான் ஒரேவழி.
 
வரிசிஸ்தான் பகுதியில் அமெரிக்கா ராணுவ உதவி மட்டும் அளிக்கவில்லை. அங்கு தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு செய்வதில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். எங்களது நட்புநாடு குடியரசு அரசாக அமைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
 
தெற்கு வரிசிஸ்தான் பகுதியில் ராணுவம் நல்ல முறையில் தனது பணியை செய்து வருகிறது. அப்பகுதி யில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails