தமிழ் ஈழப்போராட்டம் அடுத்த கட்ட போர் பற்றி மாவீரர் தினத்தில் அறிவிப்போம்: விடுதலைப்புலிகள் அறிக்கை
கொழும்பு, நவ. 17-
விடுதலைப்புலிகள் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
அன்பார்ந்த தமிழ் ஈழ மக்களுக்கும், புலம் பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும்....
கடந்த 18-5-2009 அன்று தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரிய பின்னடைவை தொடர்ந்து நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீண்டும் கட்டியமைத்து வருகிறோம். இதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசு துணை குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது போன்ற பிரசார போரை கடந்த 30 ஆண்டு பேராட்ட வரலாற்றில் இலங்கை அரசு பல தடவை நிகழ்த்தியுள்ளது. இதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
அதே வேளையில் எமது விடுதலை போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றி கொள்கை விளக்க உரை வழக்கம் போல எதிர்வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் லெட்டர் பேடில், இணைய தளம் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. எங்கிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது என்ற தகவல் எதுவும் அதில் இல்லை.
விடுதலைப்புலிகள் மாவீரர் தினம் வருகிற 27-ந்தேதி நடைபெறும். அப்போது இந்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்
source:maalaimalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment