Saturday, November 14, 2009

94 சதவீத மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டமைப்புக்கு ஆதரவு

94 சதவீத மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டமைப்புக்கு ஆதரவு

u_kumarஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்ன என்ற தலைப்பில் ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் 94 சதவீதமான வாக்காளர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பை ஆதரித்துள்ளதுடன் அந்த கட்டமைப்பே தமிழர்களின் நலன்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய நிர்வாகம் என்று அங்கீகரித்துள்ளனர்.

இந்த இணையத்தளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வாக்களிப்பில் சுமார் 10 ஆயிரத்து 154 வாக்காளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் வாக்குகளின் பிரகாரம் வெளியான முடிவுகள் வருமாறு:-

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற சொல்லை 82 சதவீதமானவர்களும் புறநிலை தமிழீழ அரசு என்ற சொற்பதத்தை 18 சதவீதமானவர்களும் ஆதரத்துள்ளனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்படவேண்டும் என்று 99 சதவீதமான வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் மூலம் சிறிலங்கா அரசின் தமிழர் விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றமுடியும் என்று 95 சதவீதமான வாக்காளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்மக்களின் இலட்சியம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 99 சதவீதமான வாக்காளர்கள் தனிநாடே தீர்வே என்று வாக்களித்துள்ளனர். ஒரு சதவீத வாக்காளர்கள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்றும் 0.2 வீதமான வாக்காளர்கள் தற்போதுள்ள ஆட்சிமுறையே தமிழர்களுக்கு போதுமானது என்று வாக்களித்துள்ளனர்


source:puthinamnews

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails