Wednesday, November 18, 2009

கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 64 ஜிபி


 


டேட்டா படிக்கும் வேகம், அழகான வடிவமைப்பு, எந்த அசைவும் தாக்க முடியாத வன்மையான வெளி அமைப்பு, பயனுள்ள சாப்ட்வேர் எனப் பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ். 


டிஜிட்டல் சாதனங்களுக்கான சந்தையில், யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களின் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் நமக்கான டேட்டாவினை, மிக எளிதாக நம்முடைய கரங்களிலே எடுத்துச் செல்ல முடிகிறது. அண்மையில் வெளியான கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200, 64 ஜிபி கொள்ளளவு திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப் பக்கத்தில் பாதி ரப்பரிலானல் ஆனது. இதனை பேக்கிங்கில் இருக்கும் போதே பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 70.39 மிமீ, 22.78 மிமீ அகலம் மற்றும் தடிமன் 12.52மிமீ. கருப்பு ரப்பரில் இதன் ஸ்லைடிங் பகுதி வழுக்கிக் கொண்டு செல்கிறது. இதன் அகலம் மற்றும் தடிமன் குறைவாக இருப்பதனால், இதன் அருகே உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இன்னொரு டிரைவினை அல்லது வேறு ஒரு சாதனத்தை இணைப்பது எளிதாகிறது. 



64 ஜிபி ஸ்டிக் மஞ்சள் வண்ணத்திலும், 32 ஜிபி நீல நிறத்திலும், 128 ஜிபி கிரே கலரிலும் கிடைக்கின்றன. டிரைவ் செயல்படுகையில் இதன் எல்.இ.டி. விளக்கு எரிந்து நமக்கு தகவல் காட்டுகிறது. இந்த டிரைவ் FAT32 பைல் வகைகளுக்கென பார்மட் செய்யப்பட்டுள்ளது. இதனை NTFS  வகையிலும் பார்மட் செய்து கொள்ளலாம். NTFS வகையில் பார்மட் செய்தால், 4 ஜிபி வரையிலான பைலை இதில் எடுத்துச் செல்ல முடியும். வழக்கமாக கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ்களுடன், சாப்ட்வேர் சிடி ஒன்று தரப்படும். இதில் அவை பதியப்பட்டே கிடைக்கின்றன. இந்த டிரைவின் இன்னொரு சிறப்பம்சம் இதில் தரப்படும்Privacy Zone மற்றும் Public Zone என்பதாகும். முதலில் தரப்படுவது ஒரு என்கிரிப்ட் ஸோன் ஆகும்.இதில் பாதுகாப்பாக டேட்டாவினை ஸ்டோர் செய்து வைக்கலாம். 
முதல் முதலில் டிரைவினைப் பயன்படுத்தத் தொடங்குகையில் Privacy Zone உருவாக்கலாமா என்ற கேள்வி கேட்கப்படும். இதற்கு இசைவு தெரிவித்தால், உடனே அடுத்த Public Zone உருவாக்க விருப்பம் கேட்கும். உடனே என்பதில் அழுத்த இந்த இரு பகுதிகளும் உருவாக்கப்படும். முதலில் உள்ள பகுதியில் உள்ள டேட்டாக்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு, நீங்கள் மட்டுமே அறிந்த பாஸ்வேர்ட் மூலமே கிடைக்கும். இரண்டாவது பகுதியில் உள்ள டேட்டாவினை யாவரும் பார்க்க முடியும். சற்று விசேஷமான டிரைவாக இது தோன்றினாலும், இந்த டிரைவ் டேட்டாவினை எழுதும் வேகம் சற்றுக் குறைவாகவே உள்ளது. ஆனால் படித்துத் தரும் வேகம் மிக அற்புதமாய், வேகமாக உள்ளது. 64 ஜிபி என்றாலும் இதன் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் விலை ரூ. 9,999. விலை இன்னும் குறைக்கப் படும் என எதிர்பார்க்கலாம்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails