மருத்துவ விஞ்ஞானத்தில் தற்போது இரு துறைகள் முன்னிலை வகிக்கின்றன. அவற்றில் ஒன்று, எல்லாவித வியாதிகளுக்கும் தீர்வு காணும் திறன் கொண்ட ஸ்டெம் செல் சிகிச்சை முறை. மற்றொன்று வியாதியின் அடிப்படையை கண்டுபிடித்து அந்த நோய் மனித பரம்பரையிலேயே இல்லாமல் செய்யும் ஜெனிடிக் முறை.
மரபணு மாற்று முறையில் ஜீன்களில் செயற்கை தன்மையை புகுத்தி பல வியாதிகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது சீன விஞ்ஞானிகள் எலிக்கு ஜீன் மாற்றம் செய்து சில சிறப்பு பண்புகளை உருவாக்கி உள்ளனர்.
என்.ஆர்.2பி. எனப்படும் ஒரு வகை ஜீன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இந்த எலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மூளை செல்களான நிïரான்களுக்கு இடையேயான தொடர்பு அதிவேகமாக உயர்ந்துள்ளது.
இந்த ஜீன்களின் வேகத்தை அல்ஜீமர் வியாதி பாதிப்பது தெரியவந்தது. அதற்கான மருந்தை செலுத்துவதன் மூலம் இந்த ஜீன்களின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதனால் அதன் நினைவுத்திறன் மற்றும் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது. மருந்தின் அளவு அதிகப்படுவதற்கு ஏற்ப எலியின் செயல்படு வேகமும் பிரமிப்பைத் தருகிறது. விஷயங்களை புரிந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. மற்ற பெண் எலிகளுடன் ஒப்பிடும்போது இதன் செயல்வேகம் 3 மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அபூர்வ திறனுடைய எலி உருவாக்கத்தில் ஜார்ஜியா மருத்துவக்கல்லூரியும் பங்கு கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜீன்களைக் கொண்டு அறிவுத்திறனை அதிகரிக்கும் சோதனை இதேகுழுவால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source:dailythathi
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment