கோலாலம்பூர்:வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.
இதனால், வருத்தமடைந்துள்ள மலேசிய அரசு, பெருகி வரும் விவாகரத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.முஸ்லிம் மத சட்டதிட்டங்களை பின்பற்றும் மலேசியாவில் கணவன்-மனைவி உறவு குறித்து அரசே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டது.
வியர்வை நாற்றம், கவர்ச்சியான உடை அணியாதது ஆகியவை தான் இளம் தம்பதியர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிந்த மலேசிய தகவல் தொடர்புத்துறை, இளம் தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்கள், தங்கள் துணைவரை எப்படியெல்லாம் வசீகரிக்க முடியும் என்பது குறித்த குறிப்புகளை இந்த கருத்தரங்கில் விளக்குகின்றனர்.
தம்பதியர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் வாசனை திரவியங்களை தயாரிக்கும் படி, நறுமண பொருள் தயாரிப்பு நிறுவனங்களை மலேசிய அரசு கேட்டு கொண்டுள்ளது.தொள தொளவென காணப்படும் பைஜாமா, டி ஷர்ட்கள் போன்றவற்றை அணியாமல் உடலை சிக்கென பிடிக்கும் உடைகளை அணியும் படியும் மலேசிய தகவல் தொடர்புத்துறை தலைவர் முகமது ரம்லி நூ தெரிவித்துள்ளார்.
முடைநாற்றம் வீசும் துணிகளை அணியாமல் துவைத்த துணிகளை அணிந்து தங்கள் துணைவருடன் பழகும் படியும், தம்பதியர் சேர்ந்து குளிக்கும் படியும் முகமது ரம்லி அறிவுறுத்தியுள்ளார்."கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக கூறுகின்றனர். அவர்களின் ஒற்றுமையின் ரகசியத்தை அப்போது புரிந்து கொண்டேன்' என்கிறார், முகமது ரம்லி.
source:dinamalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment