புலிகளின் அரசியல் தலைவர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் கொலை குறித்த விசாரணைகளை நடத்தவே அமெரிக்கா முயன்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கா சென்றிருந்த, சரத் பொன்சேகாவிடம், புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன், மற்றும் புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாகவும், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைந்த வேளையில் எவருடைய உத்தரவின் பேரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற தகவலைத் திரட்ட அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், அதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை. அத்துடன் சுமார் 3000 காயப்பட்ட போராளிகளும் இவர்களுடன் சரணடையச் சென்றதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சென்ற போராளிகள் தற்போது எந்த மருத்துவ மனையிலும் சிகிச்சை பெறவில்லை, அல்லது பெற்று வருவதற்கான சான்றுகளும் இல்லாத நிலையில், அவர்களும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது மேலோங்கியுள்ளன.
source:athirvu
--www.thamilislam.co.cc
No comments:
Post a Comment