2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என புலிகள் சொன்னதால் மகிந்த ஆட்சிபீடம் ஏறியதாகவும், அதனால் போர் மூண்டு புலிகள் அழிந்ததாகவும் கலைஞர் வசைபாடியுள்ளார். சகோதர யுத்தம் பற்றி அடிக்கடி பேசிவரும் கலைஞர் அவர்கள் தற்போது புலிகளின் பின்னடைவுக்கு புதுவகையான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். அதாவது மகிந்த ரணிலை விட ஒரு லட்சத்தி 80 ஆயிரம் வாக்குகளால் வென்றதாகவும், இலங்கையில் உள்ள 6 லட்சம் தமிழர்களும் ரணிலுக்கு வாக்களித்தால் அப்போது சமாதானத்தை வென்றெடுத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் வி.புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார். இல்லை பாசாங்கு செய்கிறார்.
வி.புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். வி.புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக் கதை பேசுகிறார். வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.
இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்கி மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார். ரணில் விக்கிரமசிங்க வந்திருந்தால் கருணாவைப் பிரித்தது போல மேலும் புலிகளை பலவீனப்படுத்தி, அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் இருந்த உறவைப் பயன்படுத்தி மேலதிகமாக போராட்டத்தை நசுக்கி இருக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்.
அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், ரணில் ஒரு கொளுக்கட்டை என்றால் மகிந்த ஒரு மோதகம், உருவங்கள் தான் வித்தியாசம் உள்ளுக்கு உள்ளதென்னவே ஒன்றுதான்.
அதுகூடாவா இவருக்குப் புரியவில்லை. போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்நிலையில் போராட்டத்தை ஊக்குவிக்கவேண்டாம், சரி போராட்டத்திற்கு ஆதரவும் தரவேண்டாம், போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.
source:athirvu
--www.thamilislam.co.cc
No comments:
Post a Comment