லக்னோ அருகே, பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள கர்ணவாலா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 25 வயதான தாரிணி என்ற இப்பெண்ணின் கணவருக்கு சொந்தமான இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிக்க பல நாட்களாக முயன்று வந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆக்கிரமிப்பு கும்பல் வந்தபோது, தாரிணியின் கணவர் வீட்டில் இல்லை. தாரிணி தங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து உள்ளே நுழைந்த ஆக்கிரமிப்பு கும்பலை தாரிணி தடுக்க முயன்றபோது தகராறு ஏற்பட்டது. குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல், அக்கும்பலில் இருந்தவர்கள் தாரிணியை கிழே தள்ளி உதைத்துள்ளனர். அருகில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து தாறுமாறாக அடித்துள்ளனர்.
அதோடு நிற்காமல், தாரிணியின் தலை முடியை பிடித்து தெருவிற்கு இழுத்து வந்து, சேலையையும் உருவியுள்ளனர். இந்த மிருகத்தனமான தாக்குதலால், தாரிணியின் வயிற்றில் இருந்த கரு சிதைந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் கவுதம் கூறியுள்ளார்.
இச்சம்பவத்துக்கு காரணமான முக்கியமான 4 பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவு ஆனவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
source:nakkheeran
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment