Friday, November 13, 2009

உலகம் முழுவதும் பசி-பட்டினியால் வாடும் 20 கோடி குழந்தைகள்

 
 
ரோம், நவ. 13-
 
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 20 கோடி குழந்தைகள் பசி மற்றும் பட்டினியால் வாடுகின்றனர். இவர்களுக்கு போதிய சத்துணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர்கள் அனவைரும் ஏழை நாடுகளில் வசிக்கும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள். இவர்களில் 90 சதவீதம் பேர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ளனர்.
 
ஆசியா கண்டத்தில் 40 சதவீதமாக இருந்த பட்டினி சதவீதம் தற்போது 30 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் ஆப்பிரிக்காவில் 34 சதவீதமே குறைந்துள்ளது.
 
தெற்கு ஆசியாவில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதம், வன்முறை போன்றவற்றால், வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 8 கோடியே 30 லட்சம் குழந்தைகள் பசியால் வாடுகின்றனர்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails