Monday, November 30, 2009

வருகிறது ஒளிக்கத்தி

 
 

ஒளி ஆயுதம் பார்த்து இருக்கிறீர்களா? புராணக் கதைகள் மற்றும் சக்திமான் போன்ற தொடர் களில் காட்டுவார்களே. கையை தூக்கியதும் அல்லது விரலை நீட்டியதும் ஒளி (மின்னல்போல) கிளம்பி சென்று எதிரிகளை தாக்குமே. அதுபோல நிஜமாகவே ஒளி ஆயுதம் வர இருக்கிறது.

அமெரிக்கா இதற்கான சோதனைகளில் இறங்கி வெற்றிப்பாதையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. ஒளிக்கதிர்களை மருத்துவத்தில் பயன்படுத்துவது உண்டு. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் ஒளிக்கற்றையை குவித்து செலுத்தும்போது அது தோல்பகுதியை கிழித்துவிடும். இந்த முறையைப் பயன்படுத்தித்தான் லேசர் கதிர்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படு கிறது.

இதுபோன்ற முறையில் ஒளியை ஆயுதமாக பயன் படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. பிளாஸ்மா கத்தி எனப்படும் ஒளிக்கத்தி அமெரிக்காவில் வடி வமைக்கப்பட்டு உள்ளது.

அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்தி போலவே இருக்கும் இந்த பிளாஸ்மா கத்தி, வெப்பமாக்கப்பட்டும், மின்னூட்டம் பெற்ற வாயுவைக் கொண்டும் ஒளிரும். இதைப் பயன்படுத்தி போரில் காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு யுத்த களத்திலேயே சிகிச்சை அளிக்க முடியும். காயம் பட்ட இடத்தை இந்த கத்தியின் மூலம் கீறி குணப்படுத்தி மூடுகிறது. இதனால் ரத்தம் வடிதல் தடுக்கப்படுவதுடன் வேறு நோய் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கிறது. இதன் மூலம் ராணுவ வீரர் காயத்தின் வலியை மறந்து செயல்படலாம்.

இந்த பிளாஸ்மா கத்தியை ஆயுதமாகப் பயன்படுத்தாமல் ஒரு உயிர்காக்கும் கருவியாகவே பயன்படுத்துவோம் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. எப்படி இருந்தாலும் வல்லரசு கையில் இருக்கும் மேலும் ஒரு வலுவான ஆயுதம் என்றே இதை எடுத்துக்கொள்ளலாம்.

source:dailythanthi
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails