சென்னையிலிருந்து வாசகர் ஒருவர் தன் கம்ப்யூட்டரை ரிப்பேருக்குக் கொண்டு செல்கையில் அல்லது ரிப்பேர் செய்திடும் டெக்னிஷியன் வீட்டுக்கு வந்து பார்க்கையில் தன்னுடைய பெர்சனல் பைல்களை அவர் படிக்காமல் எப்படி தடுப்பது? என்று கேட்டிருந்தார். இது ஒரு சிக்கலும் சுவாரஸ்யமுமான கேள்வியாக இருந்தது. இன்னொருவர் மேட்டுப் பாளையத்திலிருந்து எழுதுகையில் தன் குழந்தைகள் மட்டும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் வகையில் யூசர் அக்கவுண்ட்களை எப்படி உருவாக்கலாம் என்று கேட்டிருந்தார். இந்த இருவருக்கு ஏற்பட்ட இந்த சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். அதற்கான தீர்வுகளை இங்கு பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்திட எடுத்துச் செல்லும்போதும் அல்லது வீட்டில் வந்து ஒருவர் ரிப்பேர் செய்திடும் போதும் அவர் நம்முடைய பெர்சனல் பைல்களைப் பார்ப்பது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். வீட்டிலாவது நாம் அருகில் இருந்து ரிப்பேர் செய்பவர் என்ன என்ன பைல்களைப் பார்க்கிறார் என்று காணலாம்; ஆனால் கடையில் கொடுக்கும்போது என்ன செய்வது? அதேபோல்தான் குழந்தைகளுக்கும். அவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களின் டாகுமெண்ட்களைக் கையாள வேண் டாமே? இவர்களுக்குத் தனித்தனியே யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தச் சொல்வதே நல்லது. எப்படி தனித்தனியே யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம் என்று பார்ப்போம்.
முதன் முதலில் நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஒரு அக்கவுண்ட்டில் தொடங்கி இருப்பீர்கள். அந்த அக்கவுண்ட்டிற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் சலுகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் யார் யார் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதனை நீங்கள் கட்டுப்படுத்தலாம்; புதியவர்களுக்கு அனுமதி தரலாம்; உங்கள் பைல்களை எடிட் செய்திடலாம்; மற்ற யூசர்களின் பைல்களையும் எடிட் செய்திடலாம். இந்த பயன்கள் இல்லாமல் ஒரு யூசர் அக்கவுண்ட்டை உருவாக்கி கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்துவிடலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.
முதலில் Start கிளிக் செய்து பின் Control Panel தேர்ந்தெடுக்கவும். இப்போது கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இதில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் யூசர் அக்கவுண்ட்ஸ் விண்டோவில் Create a New Account என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இப்போது New Account விஸார்ட் கிடைக்கும். இதில் விஸார்ட் உங்களை புது அக்கவுண்ட்டுக்கான பெயரைக் கேட்கும். குழந்தைகளுக்கு எனில் அதனை அடையாளம் கொள்ளும் வகையில் Children எனக் கொடுக்கவும். அதன் பின் இந்த அக்கவுண்ட் எந்தவித டைப்பாக இருக்க வேண்டும் என கேட்கப்படும். குறைந்த அளவே சுதந்திரம் கொடுப்பது உங்கள் குறிக்கோள் என்பதால்Limited User என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Create Account என்பதில் கிளிக் செய்தால் அக்கவுண்ட் உருவாக்கப்படும். இப்போது நீங்கள் விரும்பியபடி அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து அந்த யூசர் கம்ப்யூட்டருக்குள் நுழையலாம். அவருடைய பாஸ்வேர்ட் அல்லது அவர் உருவாக்கும் பைல்களை மாற்றலாம். இவ்வாறே கம்ப்யூட்டரை ரிப்பேர் கடைக்கு எடுத்துச் செல்கையில் இதே போன்று ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி எடுத்துச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து பார்க்க அந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தச் சொல்லலாம்.
source:dinamalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment