கம்ப்யூட்டர், குறிப்பாக இன்டர்நெட் பயன்பாட்டில், ஐ.பி. (ஐக) மிக முக்கிய தொடராகும். கம்ப்யூட்டர் உலகிற்கு வெளியே ஐக என்பது ஒருவரின் (Intellectual Property) சிந்தனைச் சொத்தினைக் குறிக்கும். கம்ப்யூட்டர் உலகில் இது"Internet Protocol" என்பதன் விரிவாக்கமாகும். இதனை "TCP Transmission Control Protocol."சேர்த்துக் கூறப்படுவதனை நீங்கள் பார்த்திருக்கலாம். டிசிபி/ஐ.பி. என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தொழில் நுட்ப வசதியைக் குறிக்கிறது.
ஒவ்வொரு கம்ப்யூட்டரும் சர்வரும் (email servers, IP hosts) ஒரு ஐ.பி. முகவரியைக் கொண்டுள்ளன. சில நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்கள் கொண்ட கவர்களில் இந்த கடிதம் முகவரிக்கு அனுப்பப்பட முடியவில்லை என்றால் திருப்பி இந்த முகவரிக்கு அனுப்புக என்று ஒரு முகவரி தரப்பட்டிருக்கும். இன்டர்நெட் தகவல் பரிமாற்றத்தில் ஒரு ஐ.பி. முகவரி ஏறத்தாழ இந்தப் பணியினை மேற்கொள்கிறது.
ஐ.பி. முகவரி நான்கு எண்களைக் கொண்டதாக அமைகிறது. எடுத்துக் காட்டாக 69.44.18.176 என்பது ஒரு ஐ.பி. முகவரி. டேட்டா அனுப்பப்படுகையில் இந்த முகவரி ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் போல இணைத்து அனுப்பப்படுகிறது. இதிலிருந்து ஒருவர் இந்த டேட்டா எந்த நாட்டிலிருந்து, எந்த இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் வழியாக, எந்த கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டது என அறிந்து கொள்ளலாம். சில ரௌட்டர்களும் சாப்ட்வேர் தொகுப்புகளும் இந்த ஐ.பி.முகவரியை மறைத்து அனுப்பும் வேலையையும் செய்கின்றன. அப்படி மறைத்து அனுப்பப்படும் மெயில்களில் மறைத்து வைக்கப்பட்ட எண்ணைக் கண்டறியும் சாப்ட்வேர்களும் உள்ளன. ஒரு சிலர் இந்த ஐ.பி. முகவரி உள்ள கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு தங்கள் கடிதங்களை அந்த கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பும் வகையிலும் அனுப்புவார்கள்.
இன்டர்நெட் இணைப்பில் நிலையாக ஒரு சர்வரைக் கொண்டு அல்லது சர்வர் போல் இயக்கப்படும் கம்ப்யூட்டருக்குத்தான் நிலையான ஐ.பி. முகவரி தரப்படும். மற்றபடி நாம் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரின் கம்ப்யூட்டரின் வழியாக அனுப்புகையில் அவ்வப்போது ஒரு ஐ.பி. முகவரி கிடைக்கும். இருப்பினும் நாம் நம் ஐ.பி. முகவரி திருடு போகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சென்ற ஆண்டில் மட்டும் இது போன்று திருட்டு நடவடிக்கைகள் 450% உயர்ந்துள்ளதாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தயாரிக்கும் நிறுவனமான சைமாண்டெக் கூறியுள்ளது. இவ்வாறு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும் கம்ப்யூட்டர்களை ஆணிt என அழைக்கின்றனர். சில ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் ஒரு நெட்வொர்க்கில் கொண்டு வந்து இயக்கவும் செய்கின்றனர். இவ்வாறு நம் ஐ.பி. முகவரி திருடு போகாமால் இருக்க என்ன செய்ய வேண்டும்? நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் மட்டும் பயர்வால்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டும்.
தொழில் நுட்ப கேள்விகளுக்கு எளிமையான பதில்
ஏதேனும் தொழில் நுட்பத்தில் உங்களுக்கு சந்தேகமா? சந்தேகத்தை தெளிவிக்கும் வகையில் அதிக தகவல்களுடன் கூடிய தகவல் வேண்டுமா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி AskNerd.net ஆகும். அடிப்படையிலிருந்து நிபுணத்துவம் வரையிலான தகவல்களைத் தேடும் கேள்விகளாய் இருந்தாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எந்தவித தொழில் நுட்ப ரீதியான இதுவரை கேள்விப்படாத சொற்கள் இல்லாமல் விடைகளைத் தருகிறது இந்த தளம். அத்துடன் கேட்கப்பட்ட கேள்வி குறித்த கட்டுரைகளுக்கு லிங்க் கொடுக்கிறது. நம்மைப் பொறுத்தவரை என்னதான் அதிகம் படித்திருந்தாலும் ஒரு சில சந்தேகங்களுக்குப் பொறுமையாக தகவல்களைத் தேடித்தான் தர முடியும். ஆனால் இந்த தளம் மிக வேகமாக விடையைத் தருகிறது. அனைவரும் அடிக்கடி தங்கள் சந்தேகங்களுக்கு விடை காண இந்த தளத்திற்கு அவசியம் செல்ல வேண்டும்
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment