விளையாட்டு உடலை உறுதிப்படுத்துவதும், மனதிற்கு மகிழ்ச்சி தருவதுமான நல்ல பயிற்சி. சைக்கிள் மிதிப்பதும் ஒரு சிறந்த உடற்பயிற்சி. தற்போது இந்த இரண்டையும் சேர்த்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு புதுவித வீடியோ கேம் உடற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்றைய கால குழந்தைகளின் பொழுதுபோக்கே வீடியோ கேம்தான். நகர்ப்புறக் குழந்தைகளில் வீடியோகேம் விளையாடத் தெரியாத குழந்தைகளே இல்லை எனலாம். கிராமப்புறங்களிலும் வீடியோ கேம் ஆர்வம் குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறது. வீடியோ கேம்கள் குழந்தைகள் விளையாடும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
உதாரணமாக `பைக் ரேஸ்' விளையாட்டு என்றால் குழந்தைகள் இயக்குவதற்கென்று தனி மோட்டார் சைக்கிள் இருக்கும். அதை பட்டன் மூலம் இயக்கலாம். மற்ற பைக்குகள் தானாகவே நகரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். தானாக நகரும் பைக்குகளை முந்துவதற்காக தங்களது பைக்கை குழந்தைகள் ஓட்டும் வேகம் (பட்டனை அழுத்தும் வேகம்), அவர்களின் முக பாவனை களைப் பார்த்தால் உற்சாகத்தையும், மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தும்.
அதுபோன்ற உற்சாகத்தை தரும் வகையில்தான் இந்த வீடியோ கேம் உடற்பயிற்சி கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. கம்ப்ïட்டரில் விளையாடும்போது நாம் பயன்படுத்தும் பைக்கிற்கு பதிலாக வெளியில் உள்ள (படத்தில் காண்க) மோட்டார்சைக்கிளை பயன்படுத்தலாம். இதற்கும் வீடியோ கேமிற்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும். விளையாட்டில் கையால் பட்டனை அழுத்துவதுபோல் இதில் கால்களால் சைக்கிளை மிதிக்கும் வேகத்திற்கு ஏற்ப கேமில் நமது பைக் நகரும். கணினி மூலம் தானாக இயங்கும் பைக்குகளுடன் போட்டி போடுவதற்காக வேகமாக ஓட்டுவதால் உடலுக்கும் பயிற்சியாகிறது. உள்ளமும் பூரிப்படைகிறது. வெற்றி கிடைத்தால் இன்னும் சந்தோஷம் உச்சத்துக்கு சென்றுவிடும். இதனால் மற்ற பயிற்சிகளைவிட வேகமாக உடல் உறுதிப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் சிறுவர்கள் மட்டும் அல்லாது பெரியவர்களும் உற்சாகமாக இந்த பைக்கில் கம்ப்ïட்டருடன் போட்டி போட்டு உடலை பலப்படுத்தி, மனதிலும் மகிழ்ச்சி அடையலாம்.
இங்கிலாந்தில் இந்த வீடியோ கேம் பைக் தயாரிக்கப்பட்டு உள்ளது. என்ன... இந்த பைக்கை எப்படியாவது வாங்கணும்னு ஆசையா இருக்கா? கொஞ்ச நாள் காத்திருங்க...`சைபர் பைக்' எனப்படும் இந்த விளையாட்டு பைக் 2010 ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதை வடிவமைத்தவர் நின்டின்டோ வி என்னும் பெண்மணி ஆவார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment