Sunday, November 15, 2009

ஆட்டய போடுவதில் உலகின் நெம்பர் -1 இந்தியா தானாம்

 
 

Front page news and headlines todayபுதுடில்லி : வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் "சென்ட்'களில் ஒவ்வொன்றாய் திறந்து, சட்டையில் அடித்து வாசனை பார்ப்பதில் சிலருக்கு அலாதி பிரியம்.குண்டூசி டப்பா, பிளேடுகள், பென்சில், பேனா, ரப்பர் போன்றவற்றை "அமுக்கி' விடுவதில் சிலர் மகா கில்லாடிகள்.



தண்ணீர், குளிர்பான பாட்டிலை திறந்து குடித்துவிட்டு, அங்கேயே போட்டு விட்டு நடையை கட்டுவோரும் உண்டு. சுயசேவை வசதி உள்ள அங்காடிகளில் (மால்) இது போல தினமும் நடக்கத்தான் செய்கிறது. இப்படி "ஆட்டய' போடுவதால் இந்தியாவுக்கு பெரும் "பெருமை' கிடைத்துள்ளது தெரியுமா? ஆம், உலகில், 41 நாடுகளில் தான் கடைகளில் "லபக்'குவது அதிகமாக நடக்கிறது; அந்த பட்டியலில் இந்தியா தான் நெம்பர் 1."குளோபல் ரீடெய்ல் தெப்ட் பாரோமீட்டர்' என்ற சர்வே ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளில் நடக்கிறது. தனியார் அமைப்புகள் சேர்ந்து நடந்தும் இந்த சர்வேயில் தான் இந்தியாவின் "சாதனை' அம்பலமாகி உள்ளது.சர்வேயில், இந்தியா பற்றி கிடைத்த சில தகவல்கள்: கடைகளில் குண்டூசி முதல் நகைகள் வரை "லபக்'கப்படுகின்றன.



மொபைல் போன், ஐபாட், எம்.பி.,3, உட்பட கையடக்க எலக்ட்ரானிக் சாதனங்கள், சென்ட், லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்கள், ஜட்டி, பிரா, பனியன், உள்ளாடைகள், டீ ஷர்ட், சுரிதார் போன்ற துணிவகைகள், நகைகள் ஆகியவை தான் அதிக அளவில் "எடுக்கப்'படுகின்றன. இல்லாதவர்கள் தான் திருடுகின்றனர் என்ற எண்ணவேண்டாம்; வசதி படைத்தவர்களும் "ஜாலி'க்காக இப்படி செய்கின்றனர். இளம் வயதினர் தான் இதில் கணிசமான பேர்."சென்ட்' அடித்துப்பார்ப்பது, குளிர் பானம் பருகுவது போன்ற செயல்களை இளம் வயதினர் தான் செய்கின்றனர்.இப்படிப்பட்ட "லபக்'குகள் எல்லாம் "மால்'களில் தான் அதிகம் நடக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த "லபக்'குகளால் ஒரு நாளைக்கு 33 கோடி ரூபாய்க்கு சில்லரை வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்."ஆட்டய' போடுவதில் 41 நாடுகள் உள்ளன. அதில் , இந்தியாவில் மொத்த சில்லரை வர்த்தகத்தில் 3.2 சதவீதம் இதனால் இழப்பு ஏற்படுகிறது.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails