இந்தியாவில் உயர் கல்வி படிக்க அமெரிக்கர்கள் ஆர்வம்
வாஷிங்டன், நவ.17: இந்தியாவில் உயர் கல்வி படிக்க வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.÷இதன் மூலம் இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் ஆர்வம் அமெரிக்க மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
÷சமீபகாலமாக அமெரிக்காவில் நிர்வாகம், விஞ்ஞானம் உள்பட அனைத்து துறைகளிலுமே இந்தியர்கள் தங்களது திறமையை நிரூபித்து முக்கியப் பங்காற்றுகின்றனர். இதுபோன்ற இந்திய அறிவுஜீவிகளின் சாதனை அமெரிக்கர்களின் கவனத்தை இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களின் பக்கம் திருப்பியுள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
÷2007-08 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 3,150 மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்காக வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய கல்வி ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமான வகையில் அதிகரித்து வருகிறது.
÷2007-08 கல்வி ஆண்டில் மட்டும் 2,62,416 அமெரிக்கர்கள் பல்வேறு நாடுகளுக்கு படிக்கச் சென்றுள்ளனர்.பிரிட்டன் முதலிடம்: பிரிட்டனுக்குத்தான் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான அமெரிக்கர்கள் உயர் கல்வி பயிலச் செல்கின்றனர். பிரிட்டனில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் 2008-09 கல்வி ஆண்டில் மட்டும் 33,333 அமெரிக்கர்கள் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து இத்தாலிக்கு 30,670, ஸ்பெயினுக்கு 25,212, பிரான்ஸýக்கு 17,336, சீனாவுக்கு 13,165 அமெரிக்கர்கள் உயர் கல்வி படிக்கச் சென்றுள்ளனர். உலகில் அமெரிக்கர்கள் அதிகம் படிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் கல்வி ஆண்டில் இந்த இடத்தில் இருந்து இந்தியா முன்னேற அதிகமான வாய்ப்புள்ளதாக இந்திய கல்வி நிபுணர்கள் கணித்துள்ளனர்.
source:dinamani
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment