முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரியும், முன்னாள் ராணுவத் தளபதியுமான ஜெனெரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அரசியலை நடத்தும் சில குற்றவாளிகளாலும் கூட தமது உயிருக்கு ஆபத்து உள்ளது என சண்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை திடீரென 25 ஆகக் குறைத்ததாகவும், அதற்கு தாம் காட்டிய எதிர்ப்பை அடுத்து 60 பேரை நியமித்தது. ஆனால் அவர்கள் எல்லோரும் சாதாரண தரத்தவர்கள். ஆகவே மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இப்போது 12 கொமாண்டோக்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும். "இந்த 12 கொமாண்டோக்களும் எனக்கு தெரியாத முகங்கள். பழைய கொமாண்டோக்களை எடுத்துவிட்டு புதியவர்களை நிறுத்தியுள்ளனர். சிலவேளைகளில் இந்த கொமாண்டோக்களே என்னைக் கொல்லப்பார்க்கலாம்" என்று மேலும் கூறியுள்ளார் சரத்.
மேலும் இன்றையதினம் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறவுள்ள சரத், தாம் பதவியிலிருந்த காலத்தில், ஓய்வுபெற்ற தளபதிகளை உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்றரை மாதங்கள் வரை தங்க அனுமதித்ததாகவும் ஆனால் தம்மை உடனும் வெளியேறச்சொல்லிக் கேட்கிறார்கள் என்றும் சண்டே லீடருக்குக் கூறியுள்ளார். 'என்னை ஒரு வேண்டாத அழுக்குப் பொருளாக நடத்துகிறார்கள்' என்று தனது மனக்கவலையைக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் முழுவதும் தாம் வாடகைக்கு வீடு தேடித் திரிந்தும் முதலில் தருவதாக ஒப்புக்கொண்டவர்கள் கூட பின்னர் தனக்கு வீடு தர மறுக்கிறார்கள் என்று கூறிய சரத், '"எனக்கு வீடு கொடுக்கக்கூடாது என மக்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளார்கள்" என்றார். இந்த வேளையில் "நீங்கள் அவர்கள் எனக் குறிப்பிடுபவர்கள் யார்" என்று கேள்வியெழுப்பிய பத்திரிகையாளருக்கு பதிலளித்த சரத், "பாதுகாப்பு அமைச்சும் அதன் செயலாளரும் தான்" எனப் பதிலளித்துள்ளார்.
மேலும் தாம் கட்சி அலுவலகம் ஒன்றை ரோயல் கல்லூரி அருகே அமைக்க உள்ளதால் அதனருகிலேயே வீட்டையும் தேடி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இப்பேட்டியில், தனது சமையல்காரர்களை அரசு நிறுத்தியதற்கும் சரத் பொன்சேகா கவலை தெரிவித்துள்ளார்.
--
www.thamilislam.co.cc



No comments:
Post a Comment