கோன்னி : யானை கழிவுடன், மேலும் சில கழிவுகளைச் சேர்த்து காகிதம் தயாரிக்கும் ஆலை, விரைவில் உற்பத்தியை துவக்கவுள்ளது. யானை கழிவு மற்றும் சில கழிவுகளைச் சேர்த்து, அரைத்து கூழாக்கி, அதில் இருந்து காகிதம் தயாரிக்க கேரள அரசு திட்டமிட்டது. இதற்கான ஆலை, இடுக்கி மாவட்டம் கோன்னி பகுதியில் அமைக்கப்பட்டது.
இதற்காக, யானைகள் பராமரிக்கப்படும் இடங்களில் (யானை தாவளம்) இருந்து, யானை கழிவுகள் சேகரிக்கப்பட்டு கொண்டு வரப்படும். இங்கு, யானை கழிவுகள் மட்டுமின்றி, பிளாஸ் டிக், காகித கழிவுகள், சிகரெட் பெட்டிகள் போன்றவற்றையும் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்படும். இந்த காகிதம் மூலம், அலுவலக கோப்புகள், பைகள் (கேரி பேக்), விசிட்டிங் கார்டு போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். இத்திட்டத்தை, எர்ணாகுளத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.
இத்திட்டத்திற்கான இயந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துடன், சாண எரிவாயு (பயோ கேஸ்) திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இக்காகித தயாரிப்பு நிலையம், இம்மாத இறுதியில் செயல்படத் துவங்கும் என, மாவட்ட வனத்துறை அதிகாரி புகழேந்தி தெரிவித்தார்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment