அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் வெளியாகியுள்ள நிலையிலும், இவ்வாண்டில் இதுவரையிலான காலத்தில் அந்நாட்டில் மொத்தம் 123 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. சென்ற வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ஒரே நாளில் மூன்று வங்கிகள் திவால் ஆயின. அமெரிக்காவில், சென்ற அக்டோபர் மாதத்தில், கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இழப்பு விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இவர்களால் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால், சிறிய மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், வங்கிகள் திவால் ஆகி வருவது தொடர்கதையாகி வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். நடப்பு ஆண்டில், சென்ற julai மாதத்தில்தான் அதிக எண்ணிக்கையில் (24) வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற அக்டோபர் மாதத்தில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 20 ஆகும்.
source:dailythanthi
No comments:
Post a Comment