Tuesday, November 17, 2009

ஜால்ரா ஒலியில் பல் இளிக்குது சீனா :திபெத் மேடை; தாளம் போடுகிறார் ஒபாமா:

 

Top world news stories and headlines detail 

பீஜீங்: திபெத், சீனாவின் ஒரு பகுதியே,  இது சீனாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் திபெத் புத்த தலைவர் தலாய்லாமா பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணலாம் என சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இவரது பேச்சு சீனாவுக்கு நல்ல மகிழ்ச்சியை தந்துள்ளது என்றால் மிகையல்ல.



சர்வதேச உரிமை : ஆசிய பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா சீனாவில் 2 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நேற்று மாணவர்களுடன் உரையாற்றினார். இப்போது இரு நாட்டு உறவுகள் மேம்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்து பேசினார். இலை மறை காயாக சீனாவை சாடும் வகையில் உலகளவில் யாருடைய உரிமையும் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றார். சர்வதேச உரிமை என்று குறிப்பிட்டிருந்தார். சர்வதேச உரிமை என்பது மக்களின் சுதந்திரம், கலாச்சாரம், வழிபாடு, மற்றும் தகவல் தொடர்பு பெறுவதில தலையிடு இல்லாமை ஆகும். இது போன்ற விஷயங்களில் சுதந்திரம் யாருக்கும் பாதிக்கக்கூடாது என கூறினார்.



சிவப்பு கம்பள வரவேற்பு : இரண்டாவது நாளாக ஒபாமா சீன அதிபர் ஹூ ஜிண்டோவை சந்தித்து பேசினார். முன்னதாக அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். ஒபாமா நிருபர்களிடம் பேசுகையில் ; தற்போதைய நிலையில் சீனாவின் உறவு அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாட்டு உறவும் வலுப்பட வேண்டும். சீன அமெரிக்க உறவுகள் உற்பத்தி மந்த நிலையில் இருந்து எழுந்திருக்க உதவும் . ஏற்றுமதி மற்றும் பணி வாய்ப்புகள் பெருகும். என்றார்.



திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் சீனாவின் ஒன் சீனா கொள்கையில் தாமும் உடன்படுவதாக கூறினார். இருப்பினும் தலாய்லாமாவின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.



பிள்ளையை கிள்ளி விட்டு : திபெத்திய தலைவர் தலாய்லாமா 1959 ல் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இவரது சமீபத்திய அருணாசல பிரதேச வருகைக்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திபெத் குறித்து ஒபாமா சீனாவுக்கு ஆதரவாக பேசியதாக அந்நாட்டு அதிபர் ஹூ ஜிண்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச உரிமை குறித்து பேசிவிட்டு திபெத் விவகாரம் குறித்து ஆணித்தரமான கருத்து ஏதும் சொல்லவில்லை. சீனாவில் ஒபாமாவின் பேச்சு பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாகவே உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails