சிட்னி, நவ. 12-
ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலண்டிணாவை சேர்ந்தவர் பிலிப்பேன் (வயது 32). இவர் குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இதை சங்கிலியால் கட்டி கடற்கரை வழியாக அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கடற்கரையில் இருந்த பெரிய நாய் ஒன்று ஓடி வந்து இந்த நாயை கடிக்க வந்தது. உடனே பிலிப்பேன் தனது நாயை கையில் தூக்கி வைத்துக் கொண்டார்.
அப்போதும் அந்த நாய் விடவில்லை. துள்ளி குதித்து இவர் கையில் இருந்த நாயை கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிலிப்பேன் அந்த நாயை பிடித்து காது, முகம் என கடித்து குதறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத நாய் உடனே குட்டி நாயை கடிப்பதை விட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.
இதுபற்றி பிலிப்பேன் கூறும்போது எனது நாயை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. இதனால்தான் அந்த நாயை கடித்தேன் என்றார்
source:maalaimalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment