சா பாவுலோ:பிரேசிலில் வகுப்பறைக்கு அரை குறையாக உடையணிந்து வந்த மாணவி, பல்கலையில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தபட்ட பல்கலைக்கு, பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.பிரேசிலின் சா பாவுலோ நகரில், பன்டரினேட் என்ற பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு கெய்சி அர்ருதா (20) என்ற மாணவி படித்து வந்தார்.
விதம், விதமான புதுமையான உடைகளை அணிவதில் ஆர்வம் உடையவர் அர்ருதா. சில நேரங்களில் அவர் அரைகுறையான உடைகளை அணிந்து வரத் துவங்கினார். இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் அவரை சில முறை எச்சரித்து இருந்தது. ஒரு நாள், இளம் சிவப்பு நிறத்திலான, உயரம் குறைவான உடைகளை வகுப்பறைக்கு அணிந்து வந்தார். இதையடுத்து, பாதுகாவலர்களின் உதவியுடன் அவர், வகுப்பறையை விட்டு வெளியேற்றப் பட்டார்.
பேராசிரியர்கள் முன் நிறுத்தப்பட்டார். அவர்கள் அர்ருதாவை கடுமையாக திட்டினர். பின்னர், அவர் பல்கலையில் இருந்து நீக்கப்பட்டார். அரை குறை ஆடை அணிந்து வந்ததன் மூலம், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதாகவும், பல்கலையின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.
இத்துடன் நிற்காமல்,தங்கள் பல்கலை சார்பில் வெளியாகும் ஒரு பத்திரிகையிலும், அர்ருதாவை பற்றிய செய்தியை வெளியிட்டு, மாணவர்கள் வகுப்பறையில் எப்படி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருந்தனர்.இந்த விவகாரம் தற்போது பிரேசிலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அர்ருதா, பல்கலையில் இருந்து நீக்கப்பட்டதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தபட்ட பல்கலைகழகத்துக்கு, பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment