லண்டன்:பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் தங்களின் 98 வயதில் விவாகரத்து செய்து, உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து செய்தவர்கள் என, உலக சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து, அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பிரிட்டனை சேர்ந்தவர்கள் பெர்டி மற்றும் ஜெஸ்சி உட். இவர்கள் இருவரும் தங்கள் 98 வயதில் விவாகரத்து செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் 36 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே, தன் 99வது பிறந்த நாளுக்கு முன்னரே, பெர்டி காலமானார். ஜெஸ்சி தற்போது, பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவரும், கடந்த 1972ம் ஆண்டு, லண்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ கிராமத்தில் திருமணம் செய்து கொண்டனர். நான்காண்டுகளுக்கு பின், அவர்கள் பால்மவுத் கார்ன்வால் பகுதிக்கு சென்றனர்.
ஆனால், கடந்த 2008ம் ஆண்டு, ஜெஸ்சி விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். அதன் பின்னர் அவர்கள் தங்களின் 98 வயதில் விவாகரத்து பெற்றனர். ஆனால், இவர்களின் விவாகரத்திற்கான காரணம் குறித்து எவ்வித தெளிவான தகவல்களும் இல்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது
source:dianamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment