Tuesday, November 17, 2009

இரத்தக்கறை படிந்த 1000 ரூபா தாள் மகிந்த படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது

 

கடந்த 37 வருடங்களாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கேட்டு நடந்த போராட்டத்தைத் தாம் முறியடித்துவிட்டதாகக் கூறுகின்ற அரசானது, இன்று ஞாபகார்த்த தாள் காசை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட இந்த 1000 ரூபா ஞாபகார்த்த தாளானது முதன்முதலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த தாளின் பின்பக்கத்தில், போரில் ஈடுபட்ட தமது ராணுவம் மற்றும் போலீசாரைக் கருப்பொருளாகப் பயன்படுத்திய வாசகம் காணப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் இலங்கை தேசியக் கொடியை ஏற்றுவது போன்ற படமும் காணப்படுகின்றதாம். இதில் வேடிக்கையான விடையம் என்ன என்றால் அதில் மகிந்தவின் படமும் அச்சிடப்பட்டுள்ளது. இன அழிப்பில் இவர் ஈடுபட்டதாகக் கூறி சர்வதேச நீதிமன்றத்தில் எந்த நேரமும் வழக்கு தொடரப்படும் நிலையில் உள்ள இவரின் படத்தை 1000 ரூபா தாளில் அச்சிட்டுள்ளனர்

இரத்தக்கறை படிந்த கைகளை உயர்த்தி நாட்டு மக்களுக்கு ஆசி வழங்குவது போல இப் புகைப்படம் அமைந்துள்ளது. இரத்தக்கறைபடிந்த இந்த தாள்களை தமிழர்கள் ஏரெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 2328

  
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails