இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இணையதளங்களை பயங்கரவாதிகள் கள்ளத்தனமாக பயன்படுத்துவதாக, சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆங்கிட் பாடியா தெரிவித்தார்.
பாதுகாப்பு கவலை: இதுகுறித்து ஆங்கிட் பாடியா கூறியதாவது: உலகளவில் தகவல் தொழில் நுட்பத் துறையில், இந்தியா மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதன் பாதுகாப்பு கவலையளிப்பதாக உள்ளது. அதில் நாம் பின்தங்கி உள்ளோம்.பயங்கரவாதிகள், வாய்ஸ் ஓவர் புரோட்டகால், சாட்ஸ், புகைப்படங்களுக்குள் மறைந்திருக்கும் தகவல், டிராப்ட் இ-மெயில் மற்றும் பென் டிரைவ் உட்பட தகவல் தொடர்பு துறையின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் சைபர் சட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. ஆனால், அந்த சட்டங்களை அமலாக்கும் போலீசார் பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கு முறையான பயிற்சியின்மை ஆகியன காணப்படுகிறது.பயங்கரவாதிகள், நிலவியல் அடையாளங்கள் தெரியாத வகையில் புத்திசாலித்தனமாக இணையதளங்களை பயன்படுத்துவது, உலகளவிலான போலீசாருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.
சமீபத்தில், வைரஸ்கள், ஸ்பைவேர் மற்றும் மால்வேர் ஆகியவை, சமூக நெட்வொர்க்களான ட்விட்டர், பேஸ்புக், ஆர்குட் மற்றும் மை ஸ்பேஸ் ஆகியவை மூலம் பரப்பப்படுகின்றன.இந்த சமூக நெட்வொர்க்களில், பல்வேறு பணமோசடிகளும் நடைபெறுகின்றன.இவ்வாறு ஆங்கிட் பாடியா கூறினார்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment