எப்பவோ நடந்தது போல் இருக்கிறது பாபர் மசூதி இடிப்பு சம்பவம். அதை விசாரித்த லிபரான் கமிஷன் 17 ஆண்டுகள் கழித்து அறிக்கை சமர்ப்பிக்க, அது கசிந்து பரபரப்பாகி, ஒரு வழியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1029 பக்கங்கள். வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்பட 68 பேர் குற்றவாளிகள் எனக் கூறியுள்ளது.அரசியல் வேறு, மதம் வேறு. இரண்டையும் கலப்பது மிக ஆபத்தானது என தனது அறிக்கையில் கூறியுள்ளார் நீதிபதி லிபரான். அரசியலில் நேர்மை அவசியம். அதை உறுதி செய்ய மதம், ஜாதி, பிராந்திய அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதற்கு தடை விதிக்க வேண்டும். ம¦றினால் கடுமையான தண்டனை தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதுமே ஒவ்வொரு நாட்டிலும் பல கட்சிகள் உள்ளன. இவை எல்லாமே கொள்கை அடிப்படையில் செயல்படுகின்றன. எங்குமே மதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. அதன்பின், சிறுபான்மையினராக இருந்ததால் முஸ்லிம்கள் நலனுக்காக முஸ்லிம் லீக் தோன்றியது. பெரும்பான்மையாக இருந்த இந்துக்கள் சார்பில் ஆர்எஸ்எஸ், சங் பரிவார், விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகள் தோன்றின.
ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் அரசியல் கட்சியாக 1951ல் ஜன சங்கம் தொடங்கப்பட்டது. இது மற்ற இந்து அமைப்புகளின் ஆதரவுடன் 1980ல் பாரதிய ஜனதா என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டது. பின்னர் கூட்டணி சேர்ந்து ஆட்சியையும் பிடித்தது. ஒரு அரசியல் கட்சியின் ஆட்சி நடக்கும்போது, அந்தக் கொள்கைக்கு மாறுபட்டவர்கள் இருப்பார்கள். காலப் போக்கில் அந்தக் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சி மாறவும் வாய்ப்புண்டு. ஒரு கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் சொந்த விருப்பத்துக்காக கட்சி மாறும்போது, அவருடன் சேர்ந்து தொண்டர்கள் கூட்டமும் இடம்மாறுவது உண்டு. மேலும் கட்சிகளின் கொள்கைகளிலும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதில்லை. தொண்டர்கள் மத்தியிலும் பெரிய அளவுக்கு வெறுப்பு இருப்பதில்லை. எனவே, மதமும், அரசியலும் தனித்தனியாக இருக்கும் வரைதான் இரண்டுக்குமே நல்லது.
source:dinakaran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment