ஐதராபாத் : ஆறாயிரம் ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றால், கேமரா, பிளைட் டிக்கெட் உட்பட பல பொருட்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், ஆறாயிரம் ரூபாய்க்கு சிறிதளவு "பட்டர் சிக்கன்' வாங்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், சிறிதளவு பட்டர் சிக்கன் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு ஆன்-லைன் மூலமே ஆர்டர் கொடுக்க முடியும். ஈரானில் பிறந்தவரான, பரத் சக்சேனா என்பவர் தான், இதை தயாரித்து அளிக்கிறார். இந்த பட்டர் சிக்கனுக்கு "அனார்கலி' என்று பெயரிட்டுள்ளார். கோல்டு மற்றும் சில்வர் பேப்பர்களில் சுற்றியும், கைகளால் உருவாக்கப்பட்ட கன்டெய்னர்களிலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பட்டர் சிக்கன் வினியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து சக்சேனா கூறியதாவது: எனக்கு என் குழுவினருக்கும், பட்டர் சிக்கன் செய்வது என்பது பொழுது போக்கு. இதை நாங் கள் லாப நோக்கில் செய்யவில்லை. ஆனால், இந்தியாவில், நல்ல மற்றும் தரமான பொருளுக்கு எந்த விலை கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். இந்த பட்டர் சிக்கன் தயாரிக்க, நாங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் பற்றி விவரங்களும், எங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். ஆனால், காப்புரிமை காரணமாக அதன் அளவுகளை வெளியிடவில்லை. இவ்வாறு சக்சேனா கூறினார்.
ஆனால், பொருளாதார மந்த நிலை காரணமாக, "அனார்கலி' அறிமுகப்படுத்தியதில் இருந்து, அதற்கு வாடிக்கையாளர்கள் இடையே போதிய வரவேற்பு இல்லை. சென்ற மாதம், ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இதற்கு ஆர்டர் வழங்கி உள்ளார். ஆனால், வாடிக்கையாளரின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனக்கூறி, சக்சேனா, அவர் பற்றி தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த மாதம், நான்கு வாடிக்கையாளர்கள், "அனார்கலி' பட்டர் சிக்கனுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment