சிறீலங்கா முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் கையில் அந்நாட்டின் அதிகாரம் சென்றால் இந்தியாவின் தேசிய நலனுக்கு ஆபத்தாகிவிடும் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக அண்மையில் இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தரப்பு உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதில் இந்தியா தமது அதிருப்தியினையும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவினை கொண்டிருக்கும் சரத் பொன்சேகா சிறிலங்காவில் அதிகாரத்திற்கு வருவது இந்தியாவின் தேசியநலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதுவதாகவும் இந்தயாவின் உயர் அதிகாரிகளால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து அரசில் நலனில் ஜக்கிய தேசியக்கட்சியை ஈடுபடுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியாவால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படைத்துறையில் முதன்மைப் பதவி வகித்த சரத் பொன்சேகா, ஜக்கிய தேசியக் கட்சியின் மறைமுக ஆதரவினைப் பெற்ற ஒரு புள்ளியாக காணப்பட்டுள்ளார்.
1995ம் ஆண்டு காலப்பகுதிகளில் மேஜர் ஜெனரல் ரத்வத்தையின் காலத்தில் சரத் பொன்சேகா படைத்துறை சார் பிரிவுகளில் முன்னிலை வகிக்காவிடாமல் சந்திரிகாவால் தடுக்கப்பட்ட ஒருவாராக காணப்பட்டார். பின்பு விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் மறைமுகமாவும் நேரடியாகவும் பல படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட சரத் பொன்சேகா யாழ். மாவட்ட தளபதியாக நியமிக்கப்படுகின்றார்.
இந்த நியமனத்தில் கூட படைத்துறையில் பல்வேறு போட்டிகள் காணப்பட்டன. எனினும் ஆளும் கட்சியின் செல்வாக்கினை பயன்படுத்தி சரத் பொன்சேகா பதவி உயர்வடைகின்றார். யாழ். மாவட்ட படைத்துறைத் தளபதியாக செயற்பட்ட சரத் பொன்சேகாவின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை தீவிரப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் எத்தைனையோ பெண்கள் காணமல் போனதும், விதவைகள் ஆக்கப்பட்டதும் சரத் பொன்சேகாவின் காலத்தையே எடுத்துகாட்டும். இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் ரணில் விக்கிரமசிங்கின் ஆட்சி என்று கூறக்கூடிய காலமாக காணப்பட்டபோது ரணில் விக்கிரமசிங்கவினால் சரத் பொன்சேகா பன்னாட்டு படைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார்.
பல படைத்துறைசார் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆற்றல்மிக்கவராக திகழும் சரத் பொன்சேக தனது பதவியை தக்கவைத்து கொள்வதற்காக பல நாடுகளுக்கு சென்று படைத்துறை திட்டங்களை வியூகங்களை கற்றுகொண்டுள்ளார். இதில் சீனா, பாக்கிஸ்தான் முக்கிய இடம்வகிக்கின்றன. இந்நிலையில் தனது ஆளுகையின் கீழ் உள்ள யாழ்ப்பாணத்தில் படைக்காவலரண்களை பலப்படுத்தி வியூகங்கள் அமைப்பதற்கு பன்னாட்டு படைத்துறைசார் நிபுணர்களை வரவழைத்து ஆலோசனைகளை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இவரது பதவி உயர்வடைகின்றது. சிறிலங்காவின் படைத்துறையை பொறுப்பேற்றுக்கொள்கின்றார். விடுதலைப் புலிகளின் இலக்கிற்கு உரியவராக மாற்றமடைந்த சரத் பொன்சேகா மீது, தற்கொலைத் தாக்குதலை நடத்தப்பட்டுளளது. இதில் தப்பிய சரத் பொன்சேகா பாதுகாப்பு பலத்துடன் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துகின்றார்.
சரத் பொன்சேகாவின் ஆளுமையும் திறமையையும் பன்னாட்டு படைத்துறை சார்ந்தவர்கள் நன்கு விளங்கிக்கொண்டு படைத்துறை ரீதியான ஒத்துழைப்புக்களை சிறிலங்காவிற்கு வழங்குகின்றார்கள். இறுதிக் காலகட்டத்தில் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும் பன்னாட்டு ரீதியான படைத்துறைசார் அணுகுமுறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற காரணத்தால் மகிந்த ராஜபக்சவினால் பதவிக்காலம் நீடிக்கப்படுகின்றது.
இந்நிலையில்தான் பாக்கிஸ்தான், சீனா, ரஸ்யா, உக்ரெயின் உள்ளிட்ட நாடுகளில் படைத்துறை ஒத்துழைபை்பிற்கு சரத் பொன்சேகா முழுமையான பங்கு வகிக்கின்றார். சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் பரிவாரங்களுக்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் முறுகல் நிலை தோற்றிவிக்கப்பட்டு, அது நேரடியாக மாற்றமடைந்து தற்போது சரத் பொன்சேக தனது பதவியிணை நீக்கிகொண்டுள்ளார்.
இதன் முழுமையான பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் எதிரிகளுடன் நட்பைக் கொண்டிருக்கும் சரத் பொன்சோக, சிறிலங்காவின் சனாதிபதியானால் அது இந்தியாவை பாதிக்கும் என்ற அச்சத்தில் இந்தியா மூழ்கியுள்ளது.
source:sangathi
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment