என் இனிய தமிழினமே, சகோதர இந்தியர்களே, ஆளப் பிறந்தவர்களை அடிமைபடுத்த முனையும் அந்நிய சக்திகளை வேரறுக்க வேண்டும் என்ற கருத்தில் எமக்கு மாற்று கருத்து என்றுமே இல்லை,
இன்று நவம்பர்-26 இந்தியாவுக்கு கருப்பு நாள், 164 உயிர்களை பலி கொண்ட சோக தினம், யாரால் நிகழ்த்தப்பட்டது எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை நேரலையாக உலகமே பார்த்து மிரண்ட நாள், ஆனால் எங்கள் தங்க தலைவரின் பிறந்த நாள் , உங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறோம் , ஆனால் நீங்கள் தூக்கத்தில் அல்லவா இருக்கிறீர்கள், பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுடன் எம்மை ஒப்பிடாதீர்கள், அவர்கள் அந்நிய மண்ணின் மீது ஆசை கொண்டோர் , நாங்களோ தாய் மண்ணின் மீது பாசம் கொண்டோர், விடுதலைப்புலிகள் தமிழீழ தேசத்தின் போர் வீரர்கள், ஒவ்வொரு விடுதலைபுலியும் ஒழுக்க சீலர்கள்,காசுக்காக விலை போகும் வீணர்கள் அல்ல , தேசத்திற்காக உயிரை விடும் மாவீரர்கள் ,
தயவு செய்து எம் மேல் பயங்கரவாத முத்திரை குத்தி விடாதீர்கள் நவம்பர்-26இந்த காட்டுமிராண்டி செயலை கண்டிக்கும் ஒவ்வொரு இந்தியரும் இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா கூட்டாக சேர்ந்து நடத்திய தமிழின அழிப்பை தட்டிகேட்க தயங்குவதேன், தமிழீழ மண்ணில் மாண்ட உயிர்களை காண கூட அனுமதிக்காத நாடு இலங்கை, அதற்காக இந்திய வீரர்களும் இந்திய பணமும் யாருக்காக விரையம் செய்யப்படுகிறது, வட கிழக்கு இந்தியா தொடங்கி வடமேற்கு இந்தியா வரை சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்து வருகிறது, இந்த களவாணி தேசங்களுடன் இலங்கையில் மட்டும் கூட்டு சேர்ந்து தமிழின அழிப்பை செவ்வனே செய்து முடிக்க மட்டும் இந்தியர்களிடம் அனுமதி கேட்பதில்லை,
மனிதாபிமான எந்த ஒரு மனிதனும் செய்ய விழையாத காரியங்களை செய்து முடித்து ஈழதமிழர்களின் பிரச்சனையை கிடப்பில் போட்டுவிட்டு இன்று இலங்கை தேர்தலுக்கு வால் பிடிக்கிறதே என்ன காரணம்? தமிழினமே இந்திய சகோதரர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் இந்தியரை கிள்ளு கீரைகளாக நினைத்து தான் ஆளும் அரசு செயல்படுகிறது, கார்கில் போரை எளிதில் மறக்க முடியுமா அல்ல மறைக்கத்தான் முடியுமா, எத்தனை உயிர்களை பழிவாங்கிய பாகிஸ்தானுடன் சேர்ந்து தமிழின அழிப்பை அரங்கேற்ற யார் அனுமதி வழங்கினார், ஆளும் அரசாங்கம் அன்னியரின் கைப்பாவையா அல்லது இந்தியரை விலைபேசிவிட்டதா,
இந்திய இராணுவமே சோனியாவின் கூலிப்படையா அல்லது இலங்கையின் அடிமைப்படையா உலக நாடுகளே இலங்கை போர்க்குற்றவாளி என தீர்மானம் கொண்டுவரும் போது இந்தியா ஏன் தடுக்கிறது, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழ்ந்தால் போர்தொடுக்கும் இந்தியா எதற்காக பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கையில் தமிழின அழிப்பை நடத்தியது, யாரை ஏமாற்ற இந்த நாடகம் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை எதிர்க்கும் இந்தியா இலங்கையில் நடத்துவது எதனால், ஊருக்கு அறிவுரை கூறும் இந்தியா அருணாச்சல அரசை சீனாவிடம் தாரை வார்க்குமோ காந்தி தேசம் இல்லை இது வாந்தி தேசம், மாவீரர் வரலாற்றால் மலரபோகும் தமிழ் ஈழத்தை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது
வாழ்க பிரபாகரன் வாழ்க வாழ்கவே
வளர்க தமிழீழம் வளர்க வளர்கவே
கண்கள் குளமானது இந்த கருணை இல்லா மானிடரால்
புண்கள் ரணமானது புத்தி கெட்ட உலகத்தினால்
எண்ணிய ஈழம் அடையும் வரை இடை நில்லாது போராட்டம்
திண்ணியம் அதை அடைந்தே தீருவோம் அது கொண்டாட்டம்
எத்தனை இடர் எமை எதிர் கொண்டாலும்
சட்டென மறித்து சமர் கொள்வோம்
வாழ்க பிரபாகரன் வாழ்க வாழ்கவே
வளர்க தமிழீழம் வளர்க வளர்கவே
நாம் தமிழர் ஏ.சேகர்
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment