Saturday, August 2, 2008

சினிமா சுடர் செய்திகள்-testimony of nagma in nalumavadi

கிறிஸ்தவ மதத்தில் நடிகை நக்மா
 
.
.
சென்னை, மே 13: இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார் நடிகை நக்மா. மேலும் கிறிஸ்தவ மதத்தை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை நக்மா. இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். ஒரு சில இந்தி படங்களில் நடித்துள்ள நக்மா 1995ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த்தின் பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நக்மா, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை இழந்தார். பின்னர் போஜ்புரி மொழிக்கு சென்று ரவிகிஷன் என்ற நடிகருடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

நக்மா சகோதரி ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக விளங்கி நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். ஜோதிகா மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வர நக்மா  முயற்சித்தார்.  ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் நடிகை நக்மா கலந்து கொண்டுள்ளார்.  மேலும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பின்னர் தான் தனது மனதிற்கு சாந்தி கிடைத்துள்ள தாகவும், இயேசு கிறிஸ்துவின் பெருமைகளை உலகிற்கு  பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் நக்மா கூறியுள்ளார்.

இந்து மதத்திற்கு மாறி சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவரது சகோதரி நக்மா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

1 comment:

AK MOBILES-AL INDIA COMPUTER TECHNOLOGIES said...

My Dear Fiend

If the Islam spread through sward then No Christian and No Hindus in the world.
Do You Understand.... (ie. Nobody live in the world other than Muslims).

With Regards
AbduRahim.S

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails