"சூரத் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி குண்டுகளை வைத்தவர் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியாக இருக்கலாம்" என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்ஸ் ஜனந்தா தேவ்தீர்த் குற்றம்சாற்றியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பூரி சங்கராச்சாரியார், "மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக சூரத் நகரத்தில் நரேந்திர மோடி குண்டுகளை வைத்திருக்கலாம்" என்று சந்தேகம் தெரிவித்தார். "சூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி குண்டுகளை வைத்ததில் நரேந்திர மோடிக்கு முக்கியப் பங்கு உள்ளது. இல்லை என்றால் மரக்கிளைகள், சாலை ஓரங்களில் இருந்தெல்லாம் வெடி குண்டுகளைக் கண்டுபிடித்திருக்க முடியாது. 24 குண்டுகளும் வெடிப்பதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நம்ப முடியவில்லை. தேர்தல் அருகில் வருவதால் கோத்ரா கலவரம் போன்ற மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, அதன்மூலம் இந்துக்களின் வாக்குக்களைப் பெறுவதற்கு நரேந்திர மோடி முயற்சிக்கிறார் என்று நான் கருதுகிறேன். எதையும் செய்யக்கூடிய நரேந்திர மோடியைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நான் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் அவர். "குண்டு வெடிப்புகளில் வேண்டுமானால் ஐ.எஸ்.ஐ. போன்ற பன்னாட்டு உளவு நிறுவனங்களுக்குத் தொடர்பிருக்கலாம். ஆனால், சூரத்தில் 24 குண்டுகளும் வெடிப்பதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதில் எனக்குச் சந்தேகம் உள்ளது" என்று பூரி சங்கராச்சாரியார் தெரிவித்தார். "பிற மதத்தினரைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கு மரியாதை தருவதிலும் இஸ்லாமியருக்கு முதன்மைப் பொறுப்பு உள்ளது. இந்து மதத் தத்துவம் சகிப்புத் தன்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால், நரேந்திர மோடி அரசியல் ஆதாயங்களுக்கு மதத்தைப் பயன்படுத்துவதில் வல்லவராக உள்ளார்" என்றார் அவர். | |
No comments:
Post a Comment