3வது டெஸ்ட்: இந்தியா 249; இலங்கை 14/1 | |
| |
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷேவாக் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். திராவிட் 10, தெண்டுல்கர் 6, கம்பீர் 72, கங்குலி 35, லக்ஷ்மன் 25, கும்ப்ளே 1, படேல் 13, ஹர்பஜன் சிங் 3 ரன்கள் எடுத்தனர். இறுதியாக, இஷாந்த் சர்மாவுடன் ஜாகீர்கான் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் கடைசி நேரத்தில் அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஜாகீர்கான் 32 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மா 17 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 80 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் மென்டிஸ் 5 விக்கெட்டுகளையும், பிரசாத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முரளிதரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைதொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. வார்னபுரா 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வான்டோர்ட் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவருடன் வாஸ் ஜோடி சேர்ந்துள்ளார். இன்றைய ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 14 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். | |
(மூலம் - வெப்துனியா) |
Friday, August 8, 2008
3வது டெஸ்ட்: இந்தியா 249; இலங்கை 14/1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment