Blogger இன் கதை
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த Pyra Labs என்ற சிறிய நிறுவனத்தால் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Blogger தொடங்கப்பட்டது. அது டாட்-காம் மிக வேகமாக வளரத் தொடங்கிய நேரம். ஆனால் அந்த நேரத்தில் எங்களுக்கு VC–மூலதனம், பார்டி-த்ரோயிங், ஃபூஸ்பால்-இன்-தி-லாபி-ப்ளேயிங், இலவச-பியர்-பானம் ஆகியவற்றுக்கு நிதி இருக்கவில்லை. (மற்றவரின் இலவச பியராக இல்லாத பட்சத்தில்.)
நாங்கள் மூன்று நண்பர்களாக இருந்தோம், எங்களுக்கு, பெரிய நிறுவனங்களுக்கு இணையம் தொடர்பான பணிகள் செய்வது, தொல்லைதரக்கூடிய ஒப்பந்த திட்டப்பணிகள் போன்றவற்றால் நிதி கிடைத்தது, ஆனால் நாங்கள் இணைய உலகில் பிரம்மாண்டமாக உள்நுழைய முயற்சி செய்தோம். நாங்கள் உண்மையிலேயே என்ன செய்ய விரும்பினோம் என்பது தற்போது ஒரு பொருட்டல்ல. ஆனால், அதைச் செய்து கொண்டிருக்கும் போது நாங்கள் கிட்டத்தட்ட ஒரு திடீர் ஆசையாலும் எண்ணத்தாலும் — Blogger ஐ உருவாக்கினோம் ஆம்…. அது சுவாரஸ்யமாக இருந்தது.
Blogger இரண்டு வருடங்களில், சிறிதாகத் தொடங்கிய பயனம் மிகப் பெரிதாக வளர்ந்திருக்கிறது. நாங்கள் சிறிது பணத்தை அதிகமாக்கியுள்ளோம் (ஆனால் இன்னும் சிறிதாகவே உள்ளது). பின்னர் பணப்பற்றாக்குறை வெடித்தது, எங்கள் மகிழ்ச்சியான பயணத்தின் மகிழ்ச்சி கொஞ்சம் குறைந்தது. நாங்கள் சுருங்கிப்போய் இயங்கினோம், ஆனாலும் நாங்கள் (பல நாட்கள்) முழுமையான சேவையைத் தொடர்ந்தோம்.
2002 இல் அனைத்தும் நன்றாக நிகழ்ந்தன. எங்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரங்களில் பயனர்கள் இருந்தார்கள். பின்னர் யாரும் எதிர்பாராதது நடந்தது: Google எங்களை வாங்க விரும்பியது. ஆம், இந்த Google தான்.
Google ஐ எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பிடிக்கும். எனவே நாங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினோம். அது சிறப்பாக பணி புரிந்தது.
நாங்கள் தற்போது Google -லில் ஒரு சிறிய (ஆனால் முன்பிருந்ததை விட சற்று பெரிய) குழு. மக்கள் அவர்களுடைய சொந்த கருத்துகளை வலையில் பகிர்ந்து கொள்வதற்கு உதவவும் உலகத் தகவல்களின் தனிநபர் பார்வைகளை ஒழுங்குப்படுத்தவும் முயற்சித்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் இதுதான் எங்களுக்கு முதன்மையான பணி.
No comments:
Post a Comment