Sunday, August 31, 2008

நரேந்திர மோடிக்கு விசா! அமெரிக்க அரசு மறுப்பு


அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

Imageகுஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

 

அமெரிக்காவில் நடைபெறும் உலக குஜராத்தி மாநாட்டில் மோடி பங்கேற்பதாக உள்ளது. இந்த நிலையில் மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மோடிக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு பங்குண்டு என்று கூறி அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெட்டி மால்கமுக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் நியூஜெர்சியில் உலக குஜராத்தி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே நரேந்திர மோடிக்கு விசா கொடுக்கக் கூடாது என்று இதுவரை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 பேர் அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதங்களுக்கு அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் மாத்யூ ரிய்னோல்ட்ஸ் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், உங்கள் கருத்துகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிக அக்கறை கொண்டுள்ளது. மோடி செய்துள்ள மனித உரிமை மீறல் செயல்களை நாங்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை அவருக்கு விசா வழங்கப்படவில்லை. விசா கேட்டு விண்ணப்பம் வந்தாலும் விதிகளுக்குட்பட்டுதான் பரிசீலிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.


http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/????????-????????-????!????????-????-???????

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails