Sunday, August 31, 2008

சிரஞ்சீவிக்கு சிக்கல் நீங்கியது

   
 
Imageஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் லக்கி ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வக்கீல் சென்ன கிருஷ்ணய்யா. இவர் கடப்பா மாவட்ட தெலுங்கு தேசம் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த மார்ச்மாதம் இவர் தேர்தல் கமிஷனில் பிரஜா ராஜ்யம் என்ற கட்சி பெயரை பதிவு செய்தார். பின்னர், தான் தொடங்கிய கட்சிக்கு ஒன்றிரண்டு நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
இந் நிலையில் சிரஞ்சீவி சமீபத்தில் திருப்பதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் என்று அறிவித்தார். இதை கேட்டதும் வக்கீல் சென்ன கிருஷ்ணய்யா அதிர்ச்சி அடைந்தார். உடனே இது பற்றி சிரஞ்சீவி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதனால் சிரஞ்சீவி கட்சிக்கு பிரஜா ராஜ்யம் என்ற பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்ன கிருஷ்ணய்யாவை சிரஞ்சீவி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவருக்கு கட்சியில் முக்கிய பதவி மற்றும் ராயகோட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட டிக்கெட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று சென்ன கிருஷ்ணய்யாதான் பதிவு செய்த பிரஜாராஜ்யம் கட்சி பெயரை வாபஸ் பெற முடிவு செய்தார்.
இதையடுத்து சிரஞ்சீவியிடம் நெருங்கிய நண்பர் வினய்குமார், சிரஞ்சீவியின் வக்கீல் பிரகலாதன் ஆகியோர் சென்ன கிருஷ்ணய்யாவை டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவர், தான் அங்கு பதிவு செய்த பிரஜாராஜ்யம் பெயரை வாபஸ் பெற்றார். இதையடுத்து சிரஞ்சீவி கட்சி பெயர் பிரஜா ராஜ்யத்துக்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கியது. இது பற்றி சென்ன கிருஷ்ணய்யா கூறும்போது, "சிரஞ்சீவி மக்கள் செல்வாக்கு மிகுந்தவர். ஏழை பங்காளன் அரசியலில் அவர் குற்றப் பின்னணி உள்ளவர்களை சேர்க்கமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அரசியலில் உள்ள ரவுடிகளை ஒழிக்க முடிவு செய்துள்ளார்''.
எனவே அரசியலில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வர இருக்கும் சிரஞ்சீவிக்கு எனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் நான் பதிவு செய்த பிரஜாராஜ்யம் பெயரை வாபஸ் வாங்கி விட்டேன் என்றார்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails