ஒரிசா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஆசிரமத்தில் பூஜை செய்து கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி (வயது 85) மற்றும் சீடர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்து அமைப்புகள் நடத்திய "பந்த்"தின்போது கலவரம் வெடித்தது. அதில் கிறிஸ்துவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகினர். கலவர கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இன்னும் பல்வேறு பகுதிகளில் கலவரம் நீடித்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மீது நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சுவாமி லட்சுமணானந்தா மறைவுக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வாடிகனில் நேற்று போப் ஆண்டவர் கூறுகையில், "மனித உயிர்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் நான் கண்டிக்கிறேன். அனைவரிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும். வன்முறை சம்பவங்களில் பலியான அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். |
� |
Thursday, August 28, 2008
ஒரிசா வன்முறைக்கு போப் ஆண்டவர் கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment