ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர். பாக்தாத்தின் வடக்குப் பகுதியில், மக்ரெப் தெருவில் உள்ள ஒரு கடவுச்சீட்டு அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில்12 பேர் பலியானார்கள். 23 பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் தரைமட்டமாயின. ஏராளமானோர் தீக்காயங்களுடன் அலறித் துடித்தனர். இந்த தாக்குதலை அல்கய்டா தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் கூறியுள்ளார். இதற்கிடையே, மத்திய பாக்தாத்தில் உள்ள பேலஸ்டைன் தெருவில், அந்தப் பகுதி வழியாக செல்லும் கண்காணிப்பு காவல்துறையினரை குறிவைத்து சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 அதிகாரிகள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். அல்-காதிர் என்னுமிடத்துக்கு அடுத்துள்ள தென்கிழக்குப் பகுதியில் அரசு வாகனங்களை இலக்காக வைத்து வைக்கப்பட்ட மூன்றாவது குண்டு வெடித்ததில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து தொடர் குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். |
No comments:
Post a Comment