ஜார்ஜியா விவகாரம் : அமெரிக்கா - ரஷ்யா மோதல் | |
| |
ஜார்ஜிய மக்கள் மீது ரஷ்யா பயங்கரவாதத்தை திணிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம்சாற்றியுள்ளது. ஜார்ஜியாவில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள தெற்கு ஓஸ்டியாவிலுள்ள தனிநாடு கோரும் பிரிவினைவாதிகள் மீது ஜார்ஜியா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தங்களது ராணுவத்தைச் சேர்ந்தவர்களை, ஜார்ஜியா படையினர் கொன்று விட்டதாகக் கூறி, அவர்கள் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ரஷ்யாவின் கடுமையான தாக்குதலையடுத்து, தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ஜார்ஜியா படைகள் வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று 4வது முறையாக கூடியது. அப்போது அமெரிக்க தூதர் சல்மாய் கலீல்ஸாத், ஜார்ஜிய மக்கள் மீது ரஷ்யா பயங்கரவாதத்தை திணிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாற்றினார். அவர் இவ்வாறு கூறியதும் கடும் ஆத்திரமடைந்த ரஷ்ய தூதர் விடாலி சுர்கின், " இது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஈராக், ஆப்கானிஸ்தான், செர்பியாவில் போரை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதி வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரக் கூடாது " என்று அமெரிக்காவுக்கு காட்டமாக பதிலடி கொடுத்தார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் இந்தக் கூட்டத்திலும் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. | |
(மூலம் - வெப்துனியா) |
Friday, August 15, 2008
அமெரிக்கா - ரஷ்யா மோதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment