இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி | |
| |
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கொழும்புவில் நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில், 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஒரு தினம் மீதமிருந்த நிலையில், 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வார்னபுரா 54 ரன்களையும், ஜெயவர்த்தனே 50 ரன்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. முன்னதாக, வாண்டோர்ட் 3 ரன்களிலும், சங்ககாரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் ஜாகீர் கான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் இந்தியா தனது 2-வது இன்னிங்ஸ்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திராவிட் 68 ரன்களையும், லஷ்மண் 61 ரன்களையும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ்சில், இந்திய அணி 249 ரன்களே எடுத்தது. அதில், கம்பீர் மட்டுமே 72 ரன்கள் எடுத்தார். இரு இன்னிங்ஸ்சிலும் சேர்த்து, இலங்கையின் மெண்டிஸ் 8 விக்கெட்டுகளும், முரளிதரன் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை தனது முதல் இன்னிங்ஸ்சில் 396 ரன்கள் குவித்தது. அதில், சங்ககாரா மட்டுமே 144 ரன்கள் எடுத்து, அணியை வலுவான நிலைக்குக் கொண்டுச் சென்றார். இப்போட்டியில் ஆட்டநாயகனாக சங்ககாராவும், தொடர் நாயகனாக மெண்டிஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். | |
(மூலம் - வெப்துனியா |
Tuesday, August 12, 2008
இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment