Tuesday, August 19, 2008

முதல் ஒருநாள் : 146 ரன்களில் சுருண்டது இந்திய அணி

முதல் ஒருநாள் : 146 ரன்களில் சுருண்டது இந்திய அணி
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி தனது இன்னிங்ஸ்சில், 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 146 ரன்களில் சுருண்டது.

இதன்மூலம், இலங்கை அணிக்கு 147 ரன்கள் என்ற மிக எளிய வெற்றி இலக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக, யுவராஜ் சிங் 23 ரன்கள் எடுத்தார்; ரோகித் ஷர்மா 19 ரன்களையும், சுரேஷ் ராய்னா 17 ரன்களையும் எடுத்தனர். ஓஜா (ஆட்டமிழக்கவில்லை) 16 ரன்களையும், முனாப் படேல் 15 ரன்களையும் சேர்த்தனர்.

கோஹ்லி, ஹர்பஜன், ஜாகீர் கான் ஆகியோர் தலா 12 ரன்களையும், இர்பான் பதான் 7 ரன்களையும் எடுத்தனர்; கேப்டன் தோனி 6 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரர் கம்பீர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இலங்கை தரப்பில், மெண்டிஸ் மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குலசேகரா 2 விக்கெட்டுகளையும், வாஸ் மற்றும் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தம்புலாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட் செய்ய முடிவெடுத்து முதலில் களமிறங்கியது.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails