பீஜிங் ஒலிம்பிக் திருவிழா நிறைவு |
Fireworks of the closing ceremony in the National Stadium (Photo credit: Xinhua) The Mayor of London receives the Olympic flag. (Photo credit: Xinhua) Acrobats perform on memory tower. (Photo credit: Michael Steele/Getty Images) Giant ribbons float to the ground as thousands of performers and athletes gather around the memory tower. (Photo credit: Xinhua) |
பீஜிங் ஒலிம்பிக் திருவிழா நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. சீன தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி கடந்த 8ம் தேதி துவங்கியது. மொத்தம் 204 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் குவிந்திருந்த இந்த ஒலிம்பிக் போட்டி மீது ஒட்டுமொத்த உலக ரசிகர்களின் பார்வையையும் பதிந்திருந்தது. இதில் அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ், தடகளத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் போன்றோர் புதிய சாதனைகள் படைத்தனர். இந்திய வீரர்களில், துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். மல்யுத்தத்தில் சுஷில் குமார், குத்து சண்டையில் விஜேந்தர் ஆகியோர் வெண்கலம் கைப்பற்றினர். இதன்மூலம் இந்தியாவும் முதன் முறையாக ஒரு தங்கம், 2 வெண்கலம் என 3 பதக்கங்களை வேட்டையாடியது. கடந்த 16 நாட்களாக விளையாட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஒலிம்பிக் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு பீஜிங்கில் உள்ள 'பேர்ட்ஸ் நெஸ்ட்' அரங்கில் மிகப் பிரமாண்டமான நிறைவு விழா நடந்தது. பேண்ட் வாத்தியத்துடன் தொடங்கிய இவ்விழாவில், பாரம்பரிய சீன கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கென்ய வீரர் சாமுவேல் காமயு வான்சிருக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்ஸ் ரோகி தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார். பின்னர், அடுத்த ஒலிம்பிக் போட்டி 2012ல் லண்டனில் நடைபெறுவதையொட்டி, லண்டன் மேயர் போரிஸ் ஜான்சனிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவப்பு நிறத்திலான இரட்டை மாடி பஸ் அரங்கத்தில் வந்தது. இதனை சுற்றி நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாடினர். லண்டன் ஒலிம்பிக் துவங்குவதை குறிக்கும் வகையில் பஸ் மீது நின்றவாறு இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் பெக்காம், பந்தை உற்சாகமாக உதைத்தார். நிறைவு விழாவின் இறுதியாக, அரங்கின் நடுவே தூண் ஒன்று தோன்றியது. இதில் 'மனித கோபுரம்' போல தொங்கிய நிலையில் சீன கலைஞர்கள் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கண்ணை கவர்ந்தன. நிறைவு விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாக நடிகர் ஜாக்கிசான் வந்திருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இதன் பின்னர் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு, கண்கவர் வான வேடிக்கைகளுடன் பீஜிங் ஒலிம்பிக் முடிவடைந்தது. |
(மூலம் - வெப்துனியா) |
Monday, August 25, 2008
பீஜிங் ஒலிம்பிக் திருவிழா நிறைவு விழாவின் வண்ணமயமான படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment